கடந்த சில மாதங்களாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு பல டாப் நடிகர்கள் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம், சினிமாவில் உச்சகட்ட அங்கீகாரம் "சூப்பர் ஸ்டார்" என்ற பட்டம்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் என்ற பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வாரிசு ஒருவர் பல அட்டூழியம் செய்து வருகிறாராம். அதிலிருந்து எப்படி மீள்வது என்று சூப்பர் ஸ்டார் மட்டுமின்றி படக்குழுவினரே செய்வதறியாமல் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது ரஜினியின் மூத்த வாரிசான ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தற்போது லால்சலாம் என்ற படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தில் ரஜினி நடிக்கிறார் என்று பேசப்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் நான் நடிக்கவில்லை என்று சொல்லிவிட்டாராம் ரஜினி. ஆனால், மகளின் தொல்லை தாங்காமல் ஒப்புதல் தெரிவித்து. பின்னர், கேமியோ ரோலில் நடிப்பதாக ஒத்துக்கொண்டுள்ளார் ரஜினி.
லால் ஸலாம்;
இந்நிலையில் லால் சலாம் படத்தில் ரஜினி நீண்ட தாடியுடன் தீவிரவாதி கெட்டப்பில் உள்ளது போல போட்டோக்கள் ஏற்கனவே வெளியாகி வைரலானது.
மேலும் இதில் ரஜினியை பாடாய்படுத்தி வருகிறாராம் ஐஸ்வர்யா. அதுமட்டுமின்றி ஏதோ பத்து, பதினைந்து படங்கள் ஹிட் கொடுத்தது போல நடந்து கொள்கிறாராம்.
ஏனென்றால் சூப்பர் ஸ்டாரின் மகள் என்ற அந்தஸ்தை வைத்து இப்படி நடந்து கொள்கிறார். அதுமட்டுமின்றி லால் சலாம் படத்தில் காஸ்டியூம் டிசைனரை தற்போது வெளியேற்றிவிட்டதாகவும். மேலும் தனக்கு பிடிக்காத ஒவ்வொருவரையும் லால் சலாம் படத்திலிருந்து தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினி வெளியேற்றிவருவதாகவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
இவரது ஆட்டிட்யூட் சுத்தமாக யாருக்கும் பிடிக்கவில்லை என்று பலரும் கதறி வருகின்றனர். சொல்ல போனால் லால் சலாம் படத்தில் இருந்து விஷ்ணு விஷாலையே கழட்டி விட்டாலும் அது ஆச்சரியபடும் விஷயம் இல்லை என பலரால் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி.
ஏற்கனவே, பல குழப்பங்கள் தனது குடும்பத்தில் இருக்கும் நிலையில். ரஜினியை மேலும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளார் ஐஸ்வர்யா.

