
tamil news ➔ விமர்சனம் ➔ Kollywood NewsBy sivan|2025-03-22
ட்ராமா திரைவிமர்சனம்
நடிகை ரமா, மாரிமுத்து, விவேக் பிரசன்னா, சாந்தினி, பூர்ணிமா ரவி இன்னும் பல நட்சத்திரங்களின் நடுவில் வெளியாகி இருக்கும் படம்.
சமீப காலங்களாக அதிகரித்து வரும் குழந்தை கருத்தரிப்பு மையங்கள், குழந்தை வேண்டும் என்று ஏங்கி வரும் தம்பதியருக்குள் நடக்கும் மருத்துவ க்ரைம்கள் ஆகியவைகளை மையமாகக் கொண்டு சித்தரிக்கப்பட்ட கதை கருதான் இந்த ட்ராமா படம்.
விவேக் பிரசன்னாவின் நடிப்பு வழக்கம் போல் சூப்பர். சாந்தினி மற்றும் பூர்ணிமா ரவி ஓவர் ஆக்டிங் செய்து இருக்கிறார்கள். மற்ற நடிகர்களின் நடிப்பு பெரிதாக எடுபடவில்லை. அதிலும் குறிப்பாக காமெடி என்ற பெயரில் வரும் இரண்டு நடிகர்களின் நடிப்பு சுத்தமாக எடுபடவில்லை.
கதை அருமையாக இருந்தாலும் திரைக்கதை மிக மிக சொதப்பலாகவே உள்ளன. அடுத்து வரும் காட்சி என்ன இந்த கதை எதை நோக்கி நகர்கிறது என்பது படம் பார்க்கும் பொழுது நமக்கே ரொம்ப சுலபமாக விளங்கி விடுகிறது. இது எப்படி பார்வையாளர்களை ஈர்க்கும்?
ஒளிப்பதிவு, பாடல்கள் மற்றும் இசை ஆகியவை அனைத்தும் சுமார் ரகம்.
படத்தின் இயக்குனர் கதையை தேர்வு செய்தது போல் திரைக்கதைக்கு இன்னும் சிறிது காலம் மெனக்கெட்டிருக்கலாமோ என்று தான் தோன்றுகிறது.
ஆக மொத்தத்தில் டிராமா படம் அழுத்தம் திருத்தம் இல்லாத ஒரு திரைக்கதை கொண்ட படம்.

