
tamil news ➔ tollywood news ➔ kollywood newsBy sivan|2024-10-07
டான்ஸ் மாஸ்டர் ஜானிக்கு தேசிய விருது தற்காலிக நிறுத்திவைப்பு
பிரபல நடன இயக்குனர் ஷேக் ஜானி பாஷா அல்லது ஜானி மாஸ்டர் தமிழில் அரபிக்கூத்து, ரஞ்சிதமே, காவாலா உள்ளிட்ட பல ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.
‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் சதீஷ் கிருஷ்ணாவுடன் இணைந்து தனுஷ் நடனமாடிய ‘மேகம் கருகாதா’ பாடலுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜானி மாஸ்டரின் குழுவைச் சேர்ந்த 21 வயது பெண் நடனக் கலைஞர், அவர் தனக்கு பல ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்ததாக ஹைதராபாத் ராய்துர்கம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதற்கிடையில், தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்க அவருக்கு ஹைதராபாத் ரங்காரெட்டி மாவட்ட நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
ஆனால், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் தீவிரம் காரணமாக அவருக்கு அறிவிக்கப்பட்ட விருது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், விழா அழைப்பிதழ் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
