
tamil news ➔ movie reviews ➔ tollywood news ➔ kollywood newsBy sivan|2025-04-10
குட் பேட் அக்லி திரைவிமர்சனம்
பிரபு, சுனில், அஜித், திரிஷா, அர்ஜுன் தாஸ் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில், ஜிவி பிரகாஷ் இசையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் 'குட் பேட் அக்லி'.
ரெட் டிராகன் என்கிற ஒரு பெரிய சிண்டிகேட் க்கு தலைவரான அஜித், தனது மனைவி த்ரிஷா மற்றும் குழந்தைக்காக அந்த தொழிலை விட்டுவிட்டு ஜெயிலுக்கு செல்கிறார். தனது மகனை 18 வது பிறந்த நாளில் சந்திப்பேன் என்று வாக்கு கொடுக்கிறார். அந்த வாக்கை நிறைவேற்றும் பட்சத்தில் ஜெயிலை விட்டு வெளியே வரும்போது தன் மகன் வேறு ஒரு சூழ்ச்சி காரணமாக ஜெயிலுக்கு செல்கிறார். தன் மகனை சூழ்ச்சி பண்ணியவர்கள் யார் எதற்கு ஜெயிலில் அனுப்பினார்கள் அவரை எப்படி விடுவிக்கிறது என்பதுதான் படத்தின் ஒட்டுமொத்த கதை.
கதைகளம் மிகவும் சிறிது. கமர்சியல் வேல்யூவோ மிக மிக பெரிது. முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தும் நோக்கத்தில் இந்த படத்தை எடுத்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.
படத்தில் லாஜிக் பார்க்காதே, மேஜிக் பார் என்று சொல்வார்கள். அதேபோல் இந்த படத்தில் அஜித் என்ற மேஜிக் மூலம் இந்த படத்தை வெற்றி படமாக ஆக்கியிருக்கிறார்கள். அவருடைய பழைய ஹிட் திரைப்படங்களான வாலி அமர்க்களம் அட்டகாசம் மங்காத்தா கிரீடம் இன்னும் பல படங்களின் காட்சிகளை, மறு உருவாக்கம் செய்து ரசிகர்களின் பேராதரவகளும் கைதட்டலோடும் படத்தை எடுத்திருக்கிறார். வழக்கம்போல் அஜித் மற்றும் திரிஷாவுக்கான காட்சிகள் நம்மை ரசிக்க வைக்கின்றன.
அஜித் நடிப்பு அருமை என்றால் த்ரிஷாவின் நடிப்பு திறமை. பிரபுவின் நடிப்பு எதார்த்தம் என்றால் அர்ஜுன் தாசின் நடிப்பு பெருமை. ஒரே ஒரு காட்சிக்கு யோகி பாபு வந்து செல்கிறார். மார்க் ஆண்டனி படத்தில் கலக்கிய சுனில் இந்த படத்திலும் ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார்.
படத்தின் திரைக்கதை மிக வேகமாக நகர்வதற்கு ஏற்ப ஜீவி பிரகாஷின் இசையும் கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது. படத்தின் அடுத்த மிகப்பெரிய பலம் மிகப் பழமையான ஹிட்டான பாடல்களை எடுத்து உபயோகித்திருப்பது சாமர்த்தியம்.
ஒளிப்பதிவும் சரி, பாடல் காட்சிகளும் சரி படத்தில் இன்னொரு கூடுதல் பலம்.
படத்தின் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் பல்வேறு நேர்காணல்களில் இது ஒரு பேன் பாய் சம்பவத்திற்கான படம் என்று கூறியிருந்தார். அதேபோல்தான் இந்த படத்தை பார்க்கும்போது இது ஒரு பேன் பாய்ஸ் சம்பவம் என்று நமக்கு தோன்றும்.
ஆக மொத்தத்தில் இந்த குட் பேட் அக்லி படம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்கான கொண்டாட்டம்.
