
tamil news ➔ kollywood newsBy sivan|2024-12-05
மாரி செல்வராஜிற்கு இப்படி ஒரு பிரச்சனையா?
டைரக்டர் மாரி செல்வராஜின் சொந்த ஊர், துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள புளியங்குளம். சமீபத்தில் இந்த ஊரை சேர்ந்த, 200 பேர் விஜய்கட்சியில் சேர்ந்து விட்டனர்.
அத்தோடு, மாரி செல்வராஜ் நடித்த வாழைபடத்தில் நடித்த இரண்டு சிறுவர்கள் மற்றும் துணை நடிகர்கள் சிலர், விஜய் கட்சியின் துண்டு அணிந்தபடி இருந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை அறிந்து துடிதுடித்துப்போன மாரி செல்வராஜ், உடனே, ஊர் மக்களுக்கு போன் செய்து ‘ஏன்இப்படி பண்றீங்க… திமுகதான் நமது கட்சி’ என போன் செய்து கடுமையாக திட்டியிருக்கிறார்.
அதற்கு பதிலடி கொடுத்த ஊர்மக்கள் ''நம்ம ஊர் கதையை, வாழை படமா எடுத்து பல கோடி ரூபாய் லாபம் பார்த்தீங்களே… கதையில் வர்ற மாதிரி, நிஜமாவே விபத்து நடந்து, 19 பேர் இறந்து போனாங்களே… அவங்க குடும்பத்துக்கு ஏதாவது உதவிசெஞ்சீங்களா… அல்லது திமுகதான் உதவுச்சா?'' என காட்டமாக திருப்பி கேட்டிருக்கிறார்கள்.
பதில் தர முடியாத மாரி செல்வராஜ், ‘பட்டென போனை கட் செய்திருக்கிறார்.
''நல்லபாம்பு அழகாய் இருப்பதால் பாக்கெட்டில் போட்டுக் கொள்ள முடியாது. பா.ரஞ்சித், மாரிசெல்வராஜ் போன்றவர்களை திமுக அரசு அருகிலேயே வரவிடக்கூடாது.
ஜெயலலிதா ஆட்சியில் நடந்ததை திமுக ஆட்சியில் நடந்ததாக படம் எடுத்தவர்தான் மாரி செல்வராஜ். இன்று அவருடைய கிராமம் முழுவதும் த.வெ.க-கட்சியில் சேர்ந்து விட்டது'' என்கிற பேச்சு பலமாக அடிபட்டு வருகிறது.
