
tamil news ➔ tollywood news ➔ kollywood newsBy sivan|2025-03-19
மகேஷ் பாபு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!
ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஒடிஷாவில் சில நாள்களுக்கு முன் துவங்கியது. இதில் நடிகர்கள் மகேஷ் பாபு மற்றும் பிருத்விராஜ் இணைந்து நடித்து வந்தனர்.
மேலும், இப்படம் காசியின் வரலாற்றைப் பேசும் தொன்மக் கதையாக உருவாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக, ஹைதராபாத்தில் காசி கோவிலைப் போன்ற செட்கள் அமைக்கப்பட்டு வருகிறதாம். இந்த நிலையில், ஒடிஷாவில் நடைபெற்ற முதல்கட்ட படிப்பிடிப்பு முடிந்துள்ளது. இறுதிநாளில் படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்த உதவிய கிராமத்தினரைச் சந்தித்து அவர்களுடன் உரையாடினர்.
