நகைச்சுவை காட்சி என்பது, அனைவரையும் சிரிக்க வைக்கவும், படத்தின் தொய்வு தெரியாமல் இருக்கவும் படத்தில் பயன்படுத்துவது வழக்கம்.
பல படங்களில் பார்த்தல் கதை ஒரு பக்கமும், காமெடி ஒரு பக்கமும் படத்திற்கு சம்பந்தமே இல்லாமல் இருக்கும். ஆனாலும் அப்படம் வெற்றியடையும்.
ஆனால், சமீபத்தில் வெளியாகும் படங்களில் காமெடியன்களை ஹீரோக்களுடன் பயணிக்க வைப்பது வழக்கமாகி விட்டது.
அதுமட்டுமல்லாமல், தற்போது காமெடி நடிகர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்றே சொல்லவேண்டும்.
ஐயா நாகேஷுக்கு பிறகு, அந்த இடத்தை நிரப்ப, கவுண்டமணி செந்தில். அதன் பின் வடிவேலு அவருக்கு பின் சந்தானம் என சில ஆண்டு முன் வரை காமெடி காட்சிகளில் மக்களை ரசிக்க வைத்த கலைஞர்கள் ரிட்டையர் ஆகிவிட்டதாலும் யோகி பாபு மற்றும் சந்தானம் ஹீரோக்கள் ஆகிவிட்டதாலும் அந்த இடத்தை யார் நிரப்புவார் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
சந்தானம் வரையிலும் டபுள் மீனிங் காமெடி என்பது குறைவாகவே இருந்தது. ஆனால், சதீஷ் மற்றும் ரோபோ ஷங்கர் போன்ற நபர்கள் அவர்களை தாங்களே காமெடியன் என்று நினைத்துக் கொண்டு உலா வருகின்றனர்.
ஆம், அவர்கள் ஆரம்ப காலத்தில் நடித்த படத்திலேயே அவர்கள் கைவசம் வைத்திருந்த காமெடியை தீர்த்துவிட்டதால். தற்போது, கொச்சையான வசனங்களை பேசியும், டபுள் மீனிங் வசனங்களை பேசியும் காமெடி காட்சியை சீரழித்து வருகின்றனர்.
படத்தின் காட்சியை சீரழித்தால் கூட பரவாயில்லை, அவர்கள் நடிக்கும் படம் (U/A) சான்றிதழ் பெற்று வெளியாவதால் அப்படத்தை பார்க்கும் சிறுவர்களுக்கும் அந்த வசனம் புரியாவிட்டால் அவர்களின் தேடல் அந்த வசனத்தை நோக்கி உள்ளதே தவிர அவர்களின் வாழ்க்கையின் தேடலில் இல்லை.
எனவே, சமூக நலன் கருதி இச்செய்தியினை. "சினிமாசேட்டை" சார்பில் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் சதீஷ் மற்றும் ரோபோ ஷங்கரை காமெடியர்களாக தேர்வு செய்தால் டபுள் மீனிங் வசனங்களை பேசக் கூடாதென்று ஒப்பந்தம் செய்யவும். இல்லை என்றால் அவர்களை நடிக்க அழைக்க வேண்டாம் என்பதனை ஒரு வேண்டுகோளாக முன் வைக்கிறோம்.
இச்செய்தி சதீஷ் மற்றும் ரோபோ ஷங்கருக்கு மட்டும் இல்லை... டபுள் மீனிங் காமெடி செய்த மற்றும் செய்யவுள்ள அனைத்து கலைஞர்களுக்கும் பொருந்தும்.


