மோகன் ஜி இயக்கத்தில், செல்வராகவன், நட்டி, ராதா ரவி, கே.ராஜன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “பகாசூரன்”.
ஏற்காடு பகுதியில் ரிடைரான மிலிட்டரி ஆபிஸராக வருகிறார் நட்ராஜ். அவர் பிரபல யூட்யூபரும் கூட. அவரின் அண்ணன் மகள் திடீரென தற்கொலை செய்துகொள்கிறார். அவரின் போன் நட்ராஜின் கைக்கு வர. அப்பெண் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாலும் அதிலிருந்து மீண்டு வர முடியாமல் தற்கொலை செய்துகொண்டதும் நட்ராஜுக்கு தெரியவருகிறது.
எனவே அதில் அப்பெண் எப்படி சிக்கினால்? அதன் பின்புலம் என்ன என்பதை விசாரித்து வருகிறார் நட்டி. அப்போது, எல்லாரையும் அவர் கண்டுபிடித்து விட. அவர்களுக்கு தண்டனை வாங்கித் தர வேண்டுமென்றால் அவரின் அண்ணன் வழக்கு தொடர வேண்டுமென கேட்டுக் கொள்கிறார். ஆனால் அவர்களுக்கோ அடுத்தும் ஒரு பெண் குழந்தை இருப்பதால் முடியாதென தட்டிக்கழிக்கிறார்கள்.
எனவே, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு பெண்ணின் தந்தையை தேடி செல்கிறார் நாட்டி.
இது ஒருபுறம் இருக்க, ஒரு சிலரை கொடூரமாக கொலை செய்து வருகிறார் செல்வராகவன். அதற்கு காரணம் அவரின் மகளும் பாலியல் துன்புறுத்தல் காரணமாக இறந்ததால் தான்.
பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த குற்றவாளிகள் என்ன ஆனார்கள்? அவர்கள் அனைவரையும் செல்வராகவன் கொலை செய்தாரா? நட்டியின் திட்டம் என்ன? என்பது படத்தின் இரண்டாம் பாதி.
பீஸ்ட், சாணிகாயிதம் போன்ற படங்களை விட இதில் செல்வராகவனின் நடிப்பு சிறப்பு. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் செய்துள்ளார் செல்வா. இருப்பினும் எமோஷன் காட்சிகளில் ஏதோ ஒரு குறை இருக்கிறது.
கர்ணன் படத்தில் மிரட்டியிருக்கும் நட்டியும் இப்படத்தில் அளவான நடிப்பையே கொடுத்துள்ளார். மேலும் சிறப்பாக செய்திருக்கலாமோ என்ற எண்ணம்.
கே.ராஜனின் நடிப்பு ஒரு கட்டாயத்தில் நடித்தது போல் தான் தெரிகிறது.
வழக்கம் போல் குறிப்பிட்ட சமுதாயத்தின் பெயரை சொல்லி படம் எடுக்காமல். அதற்கு மாறாக சில கட்சியின் குறியீடுகளையும். ஒரு கல்லூரியின் அடையாளத்தையும் வைத்து பகையை வளர்த்திருக்கிறார் மோகன்.ஜி
ஆனால், மொபைல் போன் பற்றியும் அதிலுள்ள ஆபத்துகளை பற்றியும் அவர் பேசியது பாராட்டத்தக்க செயலாகும்.
இப்படம் பார்க்கும் போது, குறிப்பிட்ட ஒரு அரசியல் பிரபலம் பணம் கொடுத்து இப்படத்தை எடுக்க சொல்லியிருப்பாரோ? என்ற சந்தேகமும் எழுகிறது.
திரைக்கதையில் சொதப்பல் இருந்ததால் இப்படத்தின் ஓட்டமானது ஆமை போல் இருந்தது.
ஆனால், மகாபாரதத்தை உள்ளே திணித்து தான் ஒரு கட்சி சார்ந்த பின்புலத்தோடு படம் எடுக்கிறேன் என்பதை நிரூபித்துள்ளார் மோகன்.ஜி. இக்கதையில் வரும் பெயர்கள், இதிகாச ஒப்பீடுகள் அனைத்தும் அந்நியன் படத்தில் சாதியின் வன்மத்தை திணித்தது போன்ற ஒரு எண்ணத்தை தான் கொடுத்தது.
சாம்.சி.எஸ் இசை படத்தின் சோர்வை அங்கங்கே நீக்கியது.
பகாசூரன் - மொபைல் போனை பற்றிய விழிப்புணர்வு.

