
tamil news ➔ kollywood newsBy sivan|2025-05-30
நாங்கள் குழந்தை பெற்றால் நீங்களா வளர்க்க போகிறீர்கள் : நடிகர் சாந்தனு மனைவி காட்டமான பதில்!
பிரபல இயக்குனரான பாக்யராஜின் மகன் சக்கரகட்டி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக சினிமாவில் அறிமுகமானார். அடுத்தடுத்த படங்களில் நடித்தாலும் சினிமாவில் எதிர்பார்த்த அளவு சாந்தனு வெற்றி பெறவில்லை.
கடந்த 2015-ஆம் ஆண்டு பிரபல தொகுப்பாளினியான கீர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கீர்த்தி தனியாக இரண்டு நடனப் பள்ளிகளை தொடங்கி நடத்தி வருகிறார். இவர்கள் youtube இல் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அதில் சிலர் 10 வருடங்கள் ஆகியும் ஏன் குழந்தை இல்லை என கேள்வி கேட்டதாக தெரிகிறது.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக சாந்தனு கீர்த்தி தம்பதியினர் கூறியதாவது, எங்களிடம் குழந்தை எப்போது பிறக்கும் என கேட்கிறார்கள். குழந்தைகளை நீங்களா கவனித்துக் கொள்ளப் போகிறீர்கள்? நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். ஆனால் எங்களது குழந்தைகளை நீங்கள் வளர்த்துக் கொடுக்க போறீங்களா? நாங்கள் திமிராகவும் ஆணவமாகவோ பேசுகிறோம் என்று நினைக்க வேண்டாம்.
எங்களுடைய வலி வேதனையை தான் நாங்கள் இப்படி சொல்கிறோம். நொய் நொய் என்று கேட்டுக் கொண்டிருப்பதால் எங்களுக்கு மன அழுத்தம் தான் வருகிறது. கடவுள் எங்களுக்கு எப்போது குழந்தை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அப்போது கொடுக்கட்டும் என பதில் அளித்துள்ளார்.
