நடிகர் ஸ்ரீகாந்த் ஒருகாலத்தில், திரையுலகைகலக்கியஹாண்ட்சம் ஹீரோவாக இருந்த நிலையில், தற்போது போதை பொருள் பயன்படுத்திய வழக்கில், இவரை போலீசார் அதிரடியாக கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர் .
அதிமுக நிர்வாகி பிரசாந்த் என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் நடிகர் ஸ்ரீகாந்த், போதை மருந்து வழக்கில் சிக்கி உள்ளார். இதை தொடர்ந்து நேற்று இவரிடம் போதை மருந்து தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை செய்த போது, தன்னுடைய தவறை மறுக்காமல் ஒப்புக்கொண்ட ஸ்ரீகாந்த்... தவறு செய்து விட்டேன் என கதறி அழுத நிலையில், தன்னுடைய மகனை கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் குமுறியுள்ளார்.
மேலும் நீதிமன்றத்திலும் தன்னுடைய மகனை கவனித்துக் கொள்ள ஸ்ரீகாந்த் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், "நீதிபதி இங்கு ஜாமின் கோர முடியாது என்றும், என் டி பி எஸ் சிறப்பு கோர்ட்டில் தான் ஜாமீன் பெற முடியும் எனக்கூறி அவரின்ஜாமீன்மனுவைநிராகரித்ததுமட்டும்இன்றி, 7-ஆம்தேதிவரை நீதிமன்ற காவல் விதித்துஉத்தரவிட்டது.

இது ஒரு புறம் இருந்தாலும், ரசிகர்களும் - நெட்டிசன்களும் நடிகர் ஸ்ரீகாந்த்ன் மகனுக்கு என்ன ஆனது? என தொடர்ந்து கேள்வி எழுப்ப துவங்கி உள்ளனர். அதாவதுஅவர்தற்போதுஉடல்நலன்குன்றிஉள்ளதால்அவரைபார்த்துகொள்ளவ, ஸ்ரீகாந்த்இந்தஜாமீன்கேட்டதாகதெரிகிறது. அதேநேரம் அவருக்கு என்ன பிரச்சனை என்கிற முழுமையான தகவல் தற்போது வரை தெரியவில்லை. மேலும் ஸ்ரீகாந்த்ன் மனைவி வந்தனா பிரபல தொழிலதிபரின் மகள். அவருக்கு சொந்தமாக கல்லூரி உட்பட சில நிறுவனங்கள் உள்ளது.

அதை அவர் கவனித்து கொள்வதால், ஸ்ரீகாந்த் தான் தன்னுடைய பிள்ளைகளை கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே இப்போது மகனை பார்த்து கொள்ளும் கடமை தனக்கு இருப்பதாக ஸ்ரீகாந்த் கூறியதாக தெரிகிறது.