2022ம் ஆண்டு "சீயான்" விக்ரமுக்கு பெரும் விருந்தளித்த ஒரு ஆண்டு என்றே சொல்லலாம். காரணம், மகான், கோப்ரா, பொன்னியின் செல்வன் என ட்ரிபிள் பிளாக் பாஸ்டர் அடித்தார் விக்ரம்.

அந்த வகையில் இந்த ஆண்டும் விக்ரம் நடிப்பில் 3 படங்கள் வெளியாகிறது. பொன்னியின் செல்வன் -2 மற்றும் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் "தங்கலான்" என இரு படங்கள் ஏற்கனவே இந்த ஆண்டு வெளியாகிறது என உறுதியான நிலையில்.

தற்போது, ரசிகர்களின் பல ஆண்டு கால தாக்கத்தை தீர்க்க அதிக எதிர்பார்ப்பில் இருந்த "துருவ நட்சத்திரம்" படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம். மேலும். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் தீவிரமாக நடந்து வருவதாக தக்வலகில் வெளியாகியுள்ளது.

வருகிற மே மாதத்தில் "லியோ" படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் கவுதம் மேனனுக்கு ஷூட்டிங் முடிவுக்கு வரும் நிலையில். அடுத்த மாதம் தங்கலான் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு டப்பிங் "துருவ நட்சத்திரம்" படத்திற்கு டப்பிங் பேச தயாராகிறாராம் விக்ரம்.

எனவே, நிச்சயம் இந்த ஆண்டு இறுதிக்குள் "துருவ நடச்சத்திரம்" படம் வெளியாகும் என்று எதிர் பார்க்கலாம். அது மட்டுமின்று துருவ நட்சத்திரம் திரைப்படம் 2 பாகங்களாக வெளியாகிறது என்பது கூடுதல் தகவல்.