பாரதிராஜா,சின்னி ஜெயந்த் சமுத்திரகனி, அனன்யா, இளவரசு இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம்..

 சமுத்திரக்கனி மனைவி அனன்யா இரண்டு பெண் குழந்தைகள் என்று அமைதியாக தமிழ்நாடு கேரள எல்லையான குமுளியில் வாழ்ந்து வருகிறார். குமுளியில் லாட்டரி சீட்டு வியாபாரம் செய்து வருகிறார். அவரது குடும்பத்திற்கும் பல பணப் பிரச்சனைகள், கடன் நெருக்கடிகள் உள்ளது. ஆனாலும் மிக நேர்மையாக வாழ்ந்து வருபவர்.

 இந்நிலையில் பாரதிராஜா அவரது மகள் வரதட்சணையாக நகை கொடுக்கவில்லை என்று வீட்டிற்கு நிறைமாத கற்பனையாக திருப்பி அனுப்பப்படுவதால் மனம் நொந்து போய், குமுளி பஸ் ஸ்டாண்டில் அமர்ந்திருக்கும் போது சமுத்திரக்கனியின்  லாட்டரி சீட்டு கடையை பார்த்து லாட்டரி சீட்டு வாங்குகிறார். ஆனால் அவரிடம் காசு இல்லாததால் அந்த லாட்டரி சீட்டை சமுத்திரக்கனி தனியாக ஒரு கவரில் எடுத்து வைத்து காசு கொடுத்து பெற்றுக் கொள்ளும்படி சொல்லிவிட்டு அவரை வழி அனுப்பி விடுகிறார்.

 எதிர்பாராத விதமாக அந்த லாட்டரி சீட்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் பணம் விழுகிறது. இதனால் மிகவும் மகிழ்ச்சியான சமுத்திரக்கனி அந்த லாட்டரி சீட்டை அந்த பெரியவரிடம் ஒப்படைக்க அவரை நோக்கி பயணம் செல்லும் பொழுது, அவரது மனைவியான அனன்யா அந்த லாட்டரி சீட்டை கொடுக்காமல் இருக்கவும் என்று வாதிடுகிறார். ஆனால் சமுத்திரக்கனி மறுத்து விடுகிறார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்படுகிறது.  இதற்கு இடையில் அவர்கள் செய்யும் சூழ்ச்சியினால் அந்த லாட்டரி சீட்டின் மூலம் பணத்தை அபகரிக்க போலீசாரும் மற்றவர்களும் முயற்சி செய்கிறார்கள் இந்த பிரச்சினைகள் எல்லாத்தையும் முறியடித்தாரா பாரதிராஜாவிடம் அந்த லாட்டரி சீட்டை கொடுத்தாரா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

 கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

 வழக்கமாக கருத்துக்கள் பேசும் சமுத்திரக்கனி இந்த படத்தில் இல்லை. பாரதிராஜா, இளவரசு, அனன்யா, சின்னி ஜெயந்த் இன்னும் பல கதாபாத்திரங்கள் தங்கள் நடிப்பில் மேன்மையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

 படத்தின் முதல் பாதியில் நடக்கரும் திரைக்கதை சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. இரண்டாம் பாதியில் தொய்வு இருந்தாலும் இந்த கதை சொல்லப்பட வேண்டிய கதை என்பதனால் அதை மன்னித்து விடலாம்.

 ஒளிப்பதிவு மிக மிக அற்புதமாக உள்ளது.

 நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தின் இயக்குனர் நந்தா பெரியசாமி மிக நேர்த்தியான கதையுடன்  வந்துள்ளார்.

 நந்தா பெரிய சாமியிடம் இந்த மாதிரியான கதைகளை தான் எதிர்பார்க்கிறோம்.

 படத்தின் குறையாக பார்க்கப்படுவது காட்சிகளில் சில நாடகத் தன்மைகள் இருப்பது போல் தோன்றினாலும், ott க்கான கன்டென்ட் என்றும் தோன்றும். இது மட்டுமே இந்த படத்தில் குறையாக தோன்றுகிறது.

 ஆக மொத்தத்தில்  கல்லூரியின் கதை படத்திற்கு பிறகு நந்தா பெரியசாமிக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் திரு மாணிக்கம்.