இயக்குநர் மிஷ்கின் பாட்டல் ராதா படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் தான் ஒரு குடிகாரன் என்றும் இளையராஜாதான் பாதி பேரை குடிகாரராக்கினார் என்றும் பேசினார். மேலும் ஆபாசமாகவும் சில வார்த்தைகளை பேசினார் அவர். அவரது இந்தப் பேச்சுக்கு கண்டனங்களும், விமர்சனங்களும் வலுக்க தொடங்கியிருக்கின்றன. அந்தவகையில் இன்று 2k லவ் ஸ்டோரி படத்தின் விழாவில் பேசிய நடிகர் அருள்தாஸ் மிஷ்கினை விளாசியிருக்கிறார். 2K லவ் ஸ்டோரி படத்தின் விழா இன்று சென்னையில் நடந்தது. அப்போது மேடையில் பேசிய நடிகர் அருள்தாஸ், "மிஷ்கின் சமீபத்தில் ஒரு மேடையில் பேசினார். பார்ப்பதற்கே அவ்வளவு கஷ்டமாக இருந்தது. எவ்வளவு அநாகரீகமாக பேச முடியுமோ அவ்வளவு அநாகரிகமாக பேசியிருக்கிறார். இந்திய சினிமாவிலேயே தமிழ் சினிமாவை எல்லோரும் மதிக்கிறார்கள். ஆனால் மிஷ்கின் பேசியது தலைகுனிவைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. இது மாதிரி இன்னும் பல விமர்சனங்களை சந்தித்து வருகிறார் மிஷ்கின்.