தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய் சேதுபதி மகாராஜா திரைபடத்தில் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

அவருடைய மகன் சூர்யா விஜய் சேதுபதி சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கத்தில் 'பீனிக்ஸ் - வீழான்' திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்திலிருந்து சூர்யா சேதுபதி என்கிற பெயரில் திரைத்துறைக்கு வருகிறார்.

படத்தின் முதல் பாடலான 'யாராண்ட' பாடல் கவனம் பெற்றது. வித்யா தாமேந்திரன் எழுதிய வரிகளுக்கு சாம். சிஎஸ் இசையமைத்துள்ளார்.

இந்தவாரம் வியாழக்கிழமை (நவ.14) ரிலீஸாக இருந்தது. இந்நிலையில் படம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தணிக்கைச் சான்றிதழ் பிரச்னைகளால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.