தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இப்போது அவர் பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். லியோ படத்தை தொடர்ந்து தி கோட் படத்தில் விஜயுடன் மட்ட பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். மணிரத்னம் இயக்கத்தில் கமல் சிம்பு நடித்த தக்லைப் படத்தில் திரிஷா தான் நாயகியாக நடித்துள்ளார். மேலும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில்தான் மலையாளத்தில் திரிஷா நடித்த ஐடென்டிட்டி படம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. அஜீத்குமாருடன் திரிஷா நடித்த விடாமுயற்சி படம் வருகிற பிப்ரவரி 6ம் தேதி வெளியாகிறது. அதே போல் குட்பேட் அக்லி படத்திலும் திரிஷா தான் நாயகி. அந்த படம் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸாகிறது. இப்படி தமிழ் தெலுங்கு மலையாளம் என பல படங்களில் பிஸியாக இருந்து வரும் திரிஷாவுக்கு அடுத்தடுத்த படங்கள் கமிட் ஆகின்றன. விடாமுயற்சி தக்லைப் போன்ற படங்கள் பெரிய வெற்றியை கொடுத்தால் இன்னும் சில ஆண்டுகளுக்கு திரிஷாவுக்கு ஓய்வே இல்லாத அளவுக்கு பட வாய்ப்புகள் குவியும் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் சமீபகாலமாக நடிகை நயன்தாராவை காட்டிலும் திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வருகின்றன. நயன்தாரா சம்பளம், அவர் போடும் கண்டிஷன்கள், படப்பிடிப்பு தளத்தில் அவர் செய்யும் அலப்பரைகளால் நொந்து போன இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் நயன்தாராவை விட பெஸ்ட் திரிஷா தான் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அதே நேரத்தில் 40 வயது கடந்தும் அழகில் ஜொலிக்கிறார் நடிகை திரிஷா என்றால் அது மிகையல்ல. மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் வீடியோ ஒன்றில் கூறியதாவது, முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷாவுக்கு சினிமாவில் நடித்து மிகவும் போரடித்து விட்டது. மனச்சோர்வும் ஏற்பட்டுள்ளது. அதனால் இனி சினிமாவில் நடிக்க வேண்டாம், நடிப்பை விட்டு விலகி விடலாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அவரது அம்மாவிடம் திரிஷா சொன்ன போது, இதற்கு அவரது அம்மா சம்மதிக்கவில்லை. இதனால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதமே நடந்துள்ளது. திரிஷா திருமணம் குறித்த எந்த தகவலும் இல்லை. அதனால் சினிமாவை விட்டு விலகி குடும்ப வாழ்க்கைக்கும் செல்ல வாய்ப்பில்லை. அதே நேரத்தில் அரசியலில் எதுவும் குதிக்க போறாரா என்றும் தெரியவில்லை. ஆனால் திரிஷா சினிமாவை விட்டு விலகும் முடிவில் இருப்பதாக உறுதியாக தகவல் கிடைத்துள்ளது, என்று அந்தணன் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.