மிர்ச்சி சிவா, அஞ்சு குரியன், மேகா ஆகாஷ், ஷா ரா நடிப்பில் விக்னேஷ் ஷா இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் "சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்".

சைன்டிஸ்டாக இருக்கும் ஷா ரா, சிங்கிளாக இருக்கும் ஆண்கள் காதலிப்பதற்காக அலெக்ஸா, சிரி போன்ற ஒரு செயலியில் எப்படி நாம் சொல்லுவதை அந்த கேட்குமோ அதே போன்று. ஒரு பெண்ணின் உணர்வுகளை கொண்டு "சிம்ரன்" என்ற செயலியை உருவாக்குகிறார். ஆனால், அதில் ஒரு ஆபத்தும் இருக்கிறது.

அது என்னவென்றால், தன்னை காதலிக்கும் வரை "சிம்ரன்" அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்யும். அதுவே அவர்கள் அதை விட்டு விலகினால் அவர்களை பெரும் சிக்கலில் மாட்டியும் விடும் இந்த சிம்ரன்.

அப்படி ஒரு நாள், சிவாவிடம் "சிம்ரன்" செயலி கொண்ட போன் கைக்கு கிடைக்கிறது. அதன் பின் அவரின் வாழ்க்கையே பிரகாசமாக மாறுகிறது. அப்படி மாறிய பட்சத்தில், சிம்ரன் தனது காதலை சிவாவிடம் தெரிவிக்கிறது. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த சிவாவை பழி வாங்க காத்திருக்கிறது சிம்ரன்.

சிவாவை சிம்ரன் எப்படி பழி வாங்கியது? சிம்ரன் செய்த சூழ்ச்சியிலிருந்து தப்பித்தாரா சிவா? என்பது படத்தின் இரண்டாம் பாகம்.

ஷங்கர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிவா வழக்கம் போல் காமெடியாக நடித்துள்ளார். அவரின் அனைத்து காமெடியிலும் ஒர்க் அவுட் ஆகியிருந்தது. ஆனால், எமோஷன் காட்சிகளில் இன்னுமும் தேர்ச்சி தேவையே.

சிம்ரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மேகா ஆகாஷுக்கு யாருடனும் காம்பினேஷன் காட்சிகள் இல்லை. முழுக்க முழுக்க க்ரீன் மேட்டில் அவரின் காட்சிகள் படமாகிவிட்டனர் படக்குழு. அவர் நடிக்க பெரிதாக காட்சிகள் இல்லை என்றாலும் க்ளைமாக்ஸ் காட்சியில் அவருக்கு கொடுக்கப்பட்ட எமோஷன் காட்சியை மேலும் சிறப்பாக செய்திருக்கலாம்.

அஞ்சு குரியன் அழகு தேவதையாக வந்து செல்கிறார். அவரின் நடிப்பு சிறப்பு.

விக்னேஷ் ஷா கதை தேர்வு சிறப்பு. ஆனால், ரஜினியின் எந்திரன் படத்தை பார்த்தது போல் ஒரு எண்ணம். திரைக்கதை சிறப்பு, க்ளைமேக்ஸ் காட்சியை இன்னும் வலுவாக வைத்திருந்தால் முழு திருப்தி கிடைத்திருக்கும்.

லியோன் ஜேம்ஸ் இசை கேட்கும் ரகம்.

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் - காமெடி சரவெடி