
tamil news ➔ tollywood news ➔ kollywood newsBy sivan|2025-06-25
கார்த்தி படத்தில் நடிக்கும் நானி!
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருந்து வருபவர் கார்த்தி (Karthi) . இவரின் முன்னணி நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது.
இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் மெய்யழகன் (Meiyazhagan). இந்த படத்தில் அசத்தல் நாயகனாக நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்தை தொடர்ந்து கார்த்தி, தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் அப்படங்களில் ஷூட்டிங் எல்லாம் முடிந்த நிலையில், நடிகரும், இயக்குநருமான தமிழ் இயக்கத்தில் தனது 29வது (Karthi29) படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குநர் தமிழ் (Tamizh) , கடந்த 2022ம் ஆண்டு நடிகர் விக்ரம் பிரபுவின் (Vikram Prabhu) டாணாக்காரன் (Taanakkaran) என்ற படத்தை இயக்கி ஹிட் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்துதான் நடிகர் கார்த்தியுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2025, ஜூலை மாதத்தில் தொடங்கும் என்று கூறப்பட்டது . இந்நிலையில் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளார் என்று, அதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்துவருவதாகத் தகவல்கள் வெளியாகிவருகிறது. அந்த நடிகர் வேறு யாருமில்லை, நானிதான் (Nani). நடிகர் கார்த்தி, நானியின் ஹிட் 3 படத்தின் இறுதியில் கேமியோ ரோலில் நடித்திருந்தது போல, நானியும், கார்த்தியின் 29வது படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் உண்மையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
https://x.com/DreamWarriorpic/status/1932307341548126279?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1932307341548126279%7Ctwgr%5E8a741f6db0e85468945fc602504c48c9170795f7%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F
இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாக்கவுள்ள இந்த கார்த்தி29 திரைப்படமானது, முற்றிலும் கடல் மற்றும் மீனவர்கள் சார்ந்த கதைக்களத்துடன் உருவாக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மீனவர்களின் வாழ்க்கை முறை மற்றும் க்ரைம் திரில்லர் படமாக இந்த கார்த்தி29 படமானது உருவாக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் வரும் 2025, ஆகஸ்ட் மாதத்தில் ராமேஸ்வரத்தில் தொடங்கவுள்ளதாகக் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றனர். இந்த படத்தில் கதாநாயகியாகக் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் முக்கிய வேடத்தில் வடிவேலுவும் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
