லிஜோமோல், அனுஷா, ரோஹினி வினித் ஆகியோரது நடிப்பில் இயக்குனர் ஜெயப்ரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம்.

சாம் கதாபாத்திரத்தில் வரும் லிஜாமோல் தன் அம்மா ரோகிணியிடம் தன்னுடைய காதலை பற்றி சொல்ல அம்மா எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் காதலுக்கு ஓகே சொல்கிறார். அவரை சந்திப்பதற்கு வீட்டிற்கும் அழைப்பும் விடுகிறார், அப்பொழுது தான் தெரிகிறது லிஜோமாலின் துணை ஒரு பெண் என்று. இதை ஏற்க முடியாத ரோகினி மற்றும் அவரது கணவர் வினித் ஆகியோர்கள் என்ன செய்கிறார்கள், லிஜோமோலும் அனுஷாவும் இதை எப்படி கையாள்கிறார்கள் என்பதை உளவியல் ரீதியாக சொல்லும் படம்.

லிஜோமோலும் சரி அனுஷாவும் சரி ரோகினியும் சரி நடிப்பின் உச்சத்தை தொட்டிருக்கிறார்கள். காமெடி கதாபாத்திரத்தில் வரும் வேலைக்காரியான தீபா வழக்கம் போல் ஓவர் ஆக்டிங்.

இந்தப் படத்தின் திரைக்கதை ஒரு உளவியல் ரீதியான விஷயங்களை பேசுவதால், அதற்கு கூடுதல் அழகாக வசனங்கள் அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவும் சரி, இசையும் சரி படத்திற்கு ஒரு நேர்த்தியை கொடுத்திருக்கிறது.

இந்தப் படத்தின் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இதற்கு முன்னால் லென்ஸ், தலைகூத்தல், மஸ்கிட்டோ பிலாசபி என்று முக்கிய கருத்துகளை பேசும் படங்களை மட்டுமே எடுத்து இருக்கிறார். அதுவும் குறைந்த பட்ஜெட்டில். அந்த விதத்தில் இந்த படமும் பட்ஜெட் படம் தான் என்றாலும், கதைக்குத் தேவையான நேர்த்தி பார்வையாளர்களை ரசிக்க வைக்கிறது.

ஆனால் என்னதான் இந்த படம் ஒரு முக்கியமான உளவியல் ரீதியான விஷயங்களைப் பற்றி பேசினாலும் ஓரினச்சேர்க்கை என்கிற ஒரு விஷயம் இன்னும் மக்களால் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதுதான் உண்மை. அந்த வகையில் பார்க்கும் பொழுது இந்த காதல் என்பது பொதுவுடமை படத்தை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள் என்பது ஒரு கேள்விக்குறிதான்?