“எக்ஸாம்” வெப்தொடர் வரும் மே 15ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த தொடருக்கு திரையுலக பிரபலங்களிடமிருந்து தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மர்மமும் பரபரப்பும் கலந்த இந்த தொடரின் முன்னோட்டம் வெளியாகியதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
நடிகர் நானி, இந்த தொடரின் நடிகர் பட்டாளத்தையும் தொழில்நுட்பக் குழுவினரையும் பாராட்டி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதேபோல் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, “இந்த தொடர் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்” என தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். நடிகை சம்யுக்தா விஸ்வநாதன், “வால்வாட்சர் பிலிம்ஸின் மற்றொரு தரமான படைப்பு இது” என கூறி, இந்த தொடரை காண ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகை சுனைனா, “இந்த தொடரை பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் இந்த தொடருக்கு தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். இதனால் “எக்ஸாம்” வெப்தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
புஷ்கர் – காயத்ரி உருவாக்கத்தில், வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சற்குணம் எழுதி இயக்கியுள்ள இந்த தொடரில் துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் நடிகர் அப்பாஸும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தமிழ் மொழியில் உருவாகியுள்ள இந்த தொடர், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

