கமல்ஹாசன், நாசர், சிலம்பரசன் டி ஆர், த்ரிஷா, அபிராமி இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில், ஏ ஆர் ரகுமான் இசையில், மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம். சிறுவயது குழந்தையாக இருக்கும் சிம்பு தனது தந்தை கண்முன்னே சுடப்படுவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அதே சமயத்தில் அவரை கமல்ஹாசன் காப்பாற்றி தன்னோடு வளர்க்கிறார். தன் தங்கச்சியை காணவில்லை என்று கூற, கமல்ஹாசன் தன் தங்கச்சியை தேடும் பணியில் இருக்கிறார். அதேசமயம் பெரிய தாதாவாகவும் உருவாகிறார். ஒரு கட்டத்தில் சிம்பு பெரியவராக வளர, கமல்ஹாசன் என்ற பெரிய தாதாவில் வலது கையாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் இவர் ஜெயிலுக்குப் போகும் சூழ்நிலை ஏற்பட சிம்புவே அனைத்தையும் பார்த்துக் கொள்கிறார். திரும்பி வெளியே வரும் நேரத்தில் அனைத்தும் தலைகீழாக மாறுகிறது. கமல்ஹாசனுக்கு சிம்புவின் மேல் சந்தேகம் ஏற்படுகிறது. அதைப்போலவே அவர் கொல்லப்படுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. அதற்கு காரணம் சிம்பு தானோ என்று சந்தேகிக்கிறார் கமல்ஹாசன். அதே சமயத்தில் இன்னொரு கும்பலால் சிம்புவின் தந்தை மரணத்திற்கு காரணம் கமல்ஹாசன் தான் என்று மூட்டி விடுகிறார்கள். இதனால் சிம்பு கமல்ஹாசனை கொள்கிறார். ஆனால் கமல்ஹாசன் மீண்டு வந்தாரா சிம்புவின் தங்கச்சியை கண்டுபிடித்து கொடுத்தாரா இந்த இருவருக்குள் நடக்கும் ஆடுபுலி ஆட்டமே இந்த தக்லைப் படத்தின் கதை. கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, நாசர் என்று அனைத்து நடிகர்களும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். ரவி k சந்திரனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒவ்வொரு காட்சிகளும் பிரமாதமாகவும் பிரம்மாண்டமாகவும் இருக்கிறது. படத்தின் இன்னொரு கூடுதல் பலம் ஏ ஆர் ரகுமானின் இசை. அதிலும் குறிப்பாக பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். திரைக்கதையைப் பொறுத்தவரை முதல் பாதியில் அதிலும் 'நாயகன்' பட கெட்டப்பில் கமல்ஹாசனை D aging செய்து காட்டி இருப்பது மிகவும் அருமையாக உள்ளது. முதல் பாதி திரைக்கதை கதையைச் சார்ந்து நகரும்போது, இரண்டாம் பாதி திரைக்கதை ஆக்சனோடு நகர்கிறது. இயக்குனர் மணிரத்தினம் இந்த படத்தின் மூலம் புதிய உச்சம் தொட்டு இருக்கிறார் என்றே சொல்லலாம். ஒவ்வொரு காட்சிகளையும் ஆங்கில படத்திற்கு இணையாக எடுக்க வேண்டும் என்று மெனக்கெட்டு இருக்கிறார் என்று படம் பார்க்கும்போது நமக்கே புரியும். என்னதான் படம் நன்றாக இருந்தாலும் மெதுவாக நகரும் திரைக்கதை கொஞ்சம் சளிப்படையச் செய்கிறது அதை மட்டும் இன்னும் ட்ரிம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆக மொத்தத்தில் தக்லைப் திரைப்படம், உலக நாயகனின் வரலாற்றில் இன்னொரு மைல்கல்.