
tamil news ➔ kollywood newsBy sivan|2025-01-22
லோகேஷ் கனகராஜ் சூர்யாவை விட்டு அமீர் கானை பிடிப்பதற்கு காரணம் என்ன?
விக்ரம் படத்தில் நடிப்பதற்கு முன்பே சூர்யா லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'இரும்புக்கை மாயாவி’ என்கிற படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால், சில காரணங்களால் இன்னும் அந்த படம் தொடங்கப்படாமல் இருக்கிறது. அந்த படத்தின் கதை தனக்கு மிகவும் பிடித்த கதை என்றும்…கண்டிப்பாக அந்த படம் அனைவர்க்கும் பிடிக்கும் என சூர்யா தெரிவித்து இருந்தார்.
அதைப்போலவே இயக்குநர் லோகேஷ் கனகராஜும் தன்னுடைய கனவு படம் என்றால் இது தான் எனவும் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் படம் எப்போது உருவாகும் படத்தை எப்போது நாம் பார்க்கலாம் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளார்கள். அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், சமீபத்தில் இந்தப் படத்தில் சூர்யா நடிக்கவில்லை என்றும், அவருக்கு பதில் அமீர்கான் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவியது.
இதனையடுத்து, தற்போது 'இரும்புக்கை மாயாவி’ படம் கைமாறி போன காரணம் பற்றிய தகவலும் வெளிவந்து இருக்கிறது. அதன்படி, அமீர்கானை லோகேஷ் கனகராஜ் சந்தித்த போது அவரிடம் இந்த கதையை பற்றி கேட்டுள்ளாராம். அதற்கு லோகேஷ் கனகராஜ் கதையை பற்றி தெரிவிக்க உடனே அமீர்கானுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம்.
உடனடியாக நானே இந்த படத்தில் நடிக்கிறேன்…சூர்யாவிடம் நானே பேசிக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு சூர்யாவிடம் கேட்டாராம். உடனே சூரியாவும் நண்பர் கேட்கிறார் என்பதற்காக சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் நம்மபதக்க சினிமா வட்டாரத்தில் இருந்து கிடைத்த தகவலின் படி கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
