விஜித், ஷாலி நிவேகாஸ், அருள் தாஸ், மைம் கோபி, கீதா கைலாசம், சுபத்ரா ராபர்ட் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் அறிமுக இயக்குனர் சிவப்பிரகாசம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம். அரசு மருத்துவமனையில் Male நர்சாக வேலை பார்க்கிறார் கதையின் நாயகனான விஜித். ஆனால் அந்த ஆஸ்பத்திரியில் அடிக்கடி குழந்தை காணாமல் போகிறது. இது மருத்துவ அமைச்சரான மைன் கோபியின் சொந்தத் தொகுதியிலேயே நடப்பதால், உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்கும்படி போலீசாரிடம் உத்தரவிடுகிறார். கடைசியில் அந்த குழந்தையை கடத்துவது விஜித் என்று தெரிய வர அவர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் அடைக்கப்படுகிறார். நிஜமாகவே குழந்தை கடத்தலில் விஜி ஈடுபட்டாரா இதற்கு என்னதான் காரணம் என்பதை கண்டுபிடிப்பது தான் இந்த படத்தின் கதை கரு. இந்த ஒரு கதையே போதும் சிறந்த திரை கதையாக மாற்றி நல்ல படமாக எடுப்பதற்கு. ஆனால் இந்த திரைக்கதையில் முதல் பாதையில் எங்கேயோ செல்கிறது இரண்டாம் பாதி வேறு எங்கேயோ செல்கிறது இரண்டும் ஒரு இடத்தில் கனெக்ட் ஆகிறது அந்த இடத்தில் நமது பொறுமை இழந்து அதை பார்க்க முடியாமல் போகிறது. நடிகர்களான விஜித் நடிப்பில் இன்னும் கொஞ்சம் முன்னேற வேண்டும். நாயகி ஷாலி நடிப்போ ஓகே. மைம் கோபி அருள்தாஸ் சுபத்ரா ராபர்ட் ஆகியோரின் நடிப்பு அற்புதம். படத்தின் ஒளிப்பதிவு மிகவும் சுமாராகவே உள்ளது. இசை இளையராஜா என்று கூறுகிறார்கள் ஆனால் பாடல்கள் இளையராஜாவின் பாடல்களா என்று சந்தேகத்தை உண்டு பண்ணுகிறது. இந்தப் படத்தில் அறிமுக இயக்குனர் சிவப்பிரகாசம் படத்தின் டைட்டிலில் பாலு மகேந்திரா மாணவன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். பாலு மகேந்திராவின் மாணவரா இது என்று யோசிக்கும் அளவிற்கு இந்த திரை கதையில் இவ்வளவு சொதப்பல்கள் உள்ளன. பாலு மகேந்திரா ஒரு சாதாரண கதையை மிகவும் நேர்த்தியான திரை கதையாக மாற்றுவதில் வல்லவர். ஆனால் இதில் துளியும் அப்படி எதுவுமே இல்லை. அதிலும் குறிப்பாக முதலல் பாதியில் ஒரு கதையை சொல்கிறார். அந்த கதைக்கும் அடுத்து நடக்க போகிற கதைக்கும் துளியும் சம்பந்தமில்லாமல் போகிறது. ஆணவக் கொலை பற்றி பேச வேண்டும் என்று முயற்சித்து இருக்கிறார். ஆனால் அதை முழுமையாக சொல்லும் விதமாக எதுவுமே காட்சியில் அமைக்கவில்லை. ஒரு போலீஸ் கூடவா அந்த ஊரில் இல்லை ஆணவ கொலை நடந்ததை கண்டுபிடிப்பதற்கு என்று. அதுதான் காட்சியின் அபத்தம். பேரன்பும் பெருங்கோபமும் பெரிதாக எங்கும் எடுபடவில்லை என்பதுதான் உண்மை.