
tamil news ➔ tollywood newsBy sivan|2024-12-25
புஷ்பா 2 ல் போலீசை அசிங்கப்படுத்தியவனக்கு தேசிய விருதா : தெலங்கானா அமைச்சர் கேள்வி!
தெலங்கானா மாநிலம் முலுகுவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சீதாக்கா அந்நிகழ்ச்சியில் புஷ்பா படத்தை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகள் குறித்து பேசிய ஜெய் பீம் போன்ற படங்களுக்கு எந்த தேசிய விருதும் கிடைக்கவில்லை. ஆனால், ஒரு போலீஸ்காரரை நிர்வாணமாக்கிய கடத்தல்காரராக நடித்த அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. இது எந்த மாதிரியான செய்தியை மக்களுக்கு சொல்கிறது என்றே தெரியவில்லை.
அத்தகைய திரைப்படங்களுக்கே மத்திய அரசு விருதுகளையும் வழங்க வேண்டும். அதைத் தவிர்த்து சட்ட விரோதமாக கடத்தல் செய்வதை புனிதமாகவோ அல்லது சட்டத்தின் அதிகாரத்தை குறைத்து மதிப்பிடும் படங்களை பெருமை படுத்தும் விதமாக நடக்கக் கூடாது" என்று கூறினார்.
புஷ்பா 2 பட மரண விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடையும் நிலையில், அல்லு அர்ஜூனுக்கு புஷ்பா படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வழங்கிய மத்திய அரசை விமர்சித்துள்ளார் அமைச்சர் சீதக்கா. இது அல்லு அர்ஜுனின் ரசிகர்களை மேலும் கொதிப்படைய செய்திருக்கிறது
