பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக் கான் கிட்ட தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக பூஜா தத்லானி என்பவரை வேலைக்கு வைத்துள்ளார். அவரை, அனைத்து முக்கியமான நிகழ்வுகள், விருது விழாக்கள், கூட்டங்கள் மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் ஷாருக்கானுடன் நீங்கள் பார்த்திருக்கலாம்.

ஷாருக்கானின் மேனேஜர் பூஜா தத்லானி இந்தி பட உலகின் பிரபலர் பிஆர் ஆவார். பூஜா தத்லானி சமீபத்தில் தனது புதிய இல்லத்தில் காலடி எடுத்து வைத்தார். ஷாருக்கானின் மனைவி கௌரி கானால் வடிவமைத்த வீடு தான் அது.
இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் எழுதிய பூஜா தத்லானி, என் புதிய இல்லத்தில் அடியெடுத்து வைப்பது, அரவணைப்பு மற்றும் மகிழ்ச்சியை உருவாக்க புதிய கனவுகளுக்கு. இந்த புதிய பயணத்தை தொடங்குவதற்கு வேறு யாரும் இல்லாத கௌரிகான் என் குடும்பத்தை விட சிறந்த வழி என்ன.. அவள் என் வீட்டை ஒரு வீடாக மாற்றினாள். இங்கே பாருங்கள் என்று பதிவிட்டார்.
https://www.instagram.com/p/Cocdb2etSZ4/?utm_source=ig_web_button_share_sheet
கடந்த வியாழக்கிழமை பூஜாவின் புதிய இல்லத்தில் மனைவி கௌரி கான் மற்றும் மகன் ஆர்யன் கானுடன் ஷாருக்கான் ஆகியோர் இருந்தனர். இப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. பூஜா தத்லானி கடந்த 2012 முதல் ஷாருக்கின் மேனேஜர் ஆக தொழில்முறை வேலை ஒப்பந்தங்களை நிர்வகித்து வருகிறார்.
கே.கே.ஆர் மற்றும் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் உள்ளிட்ட நிர்வாகத்தை கவனித்தும் வருகிறார். MensXP.com என்ற நிறுவனத்தின் கூற்றுப்படி, பூஜா தத்லானியின் நிகர மதிப்பு ரூ. 45 முதல் 50 கோடி வரை இருக்கும். அவர் ஆண்டுக்கு ரூ.7 முதல் 9 கோடி வரை சம்பாதிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு ஆர்யன் கான் வழக்கு உட்பட பூஜா ஷாருக் குடும்பத்துடன் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

