
tollywood news ➔ kollywood newsBy Ottran Dorai|2025-08-07
தெலுங்கு திரையுலகில் கால் பதிக்கிறார் யோகி பாபு – பிரம்மானந்தத்துடன் நகைச்சுவை ஜோடி!
தமிழ் சினிமாவில் தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் பிரபலமடைந்த யோகி பாபு, இப்போது தெலுங்கு திரைத்துறையில் தனது முதல்படத்தால் ரசிகர்களை கவர உள்ளார். ‘குர்ரம் பாப்பி ரெட்டி’ என்ற படத்தின் மூலம் இவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தை முரளி மனோகர் ரெட்டி இயக்குகிறார். மேலும் நகைச்சுவையின் ஜாம்பவானாக வணங்கப்படும் பத்மஸ்ரீ விருதுப் பெற்ற பிரம்மானந்தம், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் இரண்டு முக்கிய நகைச்சுவை வீரர்கள் ஒரே திரையில் தோன்றுவதால், திரையுலகத்தில் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
படப்பிடிப்பின் போது, யோகி பாபுவும் பிரம்மானந்தமும் நல்ல நட்பை ஏற்படுத்தினர். பிரம்மானந்தம், யோகி பாபுவை தன்வீட்டுக்கு அழைத்து, நேரம் செலவழித்து, தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். மேலும், தனது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் “நான் பிரம்மானந்தம்” என்ற புத்தகத்தை நினைவுப் பரிசாக வழங்கினார்.
இந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டும், தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்ட யோகி பாபு கூறியதாவது, "தெலுங்கு சினிமா என்னை மிகுந்த அன்புடன் வரவேற்கிறது. பிரம்மானந்தம் சார் போன்ற ஒரு லெஜண்டுடன் வேலை செய்வது எனக்கு ஒரு பெரும் அனுபவமாக இருக்கிறது."
‘குர்ரம் பாப்பி ரெட்டி’ திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு ரசனைமிக்க நகைச்சுவை அனுபவமாக அமையப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். கலாச்சாரப் பெரும்பெயர்களின் சந்திப்பு எனும் வகையில், இது தமிழ்-தெலுங்கு சினிமா உலகத்தில் ஒரு புதிய இணைப்பாகவும் பார்க்கப்படுகிறது.
இத்திரைப்படத்தின் பிற தகவல்கள் மற்றும் வெளியீட்டு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
