
movie reviews ➔ kollywood newsBy sivan|2025-01-13
தருணம் திரைவிமர்சனம்
கிசன் தாஸ், ஸ்மிருதி வெங்கட், பால சரவணன், கீதா கைலாசம் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம்.
CRPF ல் போலீஸ் அதிகாரியாக இருக்கும் கிசன் தாஸ்க்கு ஒரு ஆபரேஷனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சகப் பணியாளர் உயிர் இழக்கிறார், மேலும் இவருக்கும் கையில் குண்டடி பட்டு விடுகிறது. அதனால் அவர் சென்னைக்கு என்கொயரிக்கு வரவழைக்கப்படுகிறார். ஒரு பப்பில் ஸ்மிருதி வெங்கட் மற்றும் அவருடைய பாய் பிரண்டுடன் கார் டேட்டிங் போகும்போது கார் ஓட்டும்போது ஆக்சிடென்ட் நடந்து விடுகிறது. அதனால் இவர்கள் இருவருக்கும் நடத்த திட்டமிட்டு இருந்த திருமணம் நின்று விடுகிறது. ஆனால் அவர்களின் கல்யாணத்திற்கு செல்லும் போது இருவரும் சந்திக்க நேரிடுகிறது. அதன் பிறகு இவர்களுக்குள் காதல் மலர்கிறது. இந்த காதலினால் ஸ்மிருதி வெங்கட்டை ஒருதலைப் பட்சமாக காதலித்த பாய் ஃப்ரெண்ட் கொல்லப்படுகிறான். அந்தக் கொலையிலிருந்து இவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதுதான் படத்தின் கதை.
கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தை போல் இல்லாமல் அதைவிட கம்மியாக ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று முனைப்பில் இந்த படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன்.
முதல் பாதியில் வேகம் குறைந்தாலும் காதல் காட்சிகள் அருமை.
இரண்டாம் பாதி சற்று சலிப்பைத் தட்டுகிறது, அடுத்து இதுதான் என்று யூகிக்க வைப்பதால் கதையில் விறுவிறுப்பு மிகவும் குறைந்து விடுகிறது.
திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
இந்த படத்தின் மிகப்பெரிய பலம் அழகான ஒளிப்பதிவு. படம் பார்ப்பதற்கு சின்னதாக தெரிந்தாலும், இந்த படத்தின் பிரம்மாண்டம் பட்ஜெட்டை கூட்டி காட்டுகிறது.
தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் சுமார்ரகம். ஆனால் பின்னணி இசையில் பின்னி எடுத்து இருக்கிறார்.
கீதா கைலாசத்தின் கதாபாத்திரம் என்ன சொல்ல வருகிறது என்று புரியவில்லை. கடைசி வரையும் ஊடாடிக்கொண்டே இருக்கிறது. பால சரவணனின் கதாபாத்திரமும் பெரிதாக ஈர்க்கவில்லை.
ஆக மொத்தத்தில் தருணம் படம் சுமார் ரகம். ஒரு தடவை பார்க்கலாம்.
