தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் தன் கவனத்தை செலுத்தி வரும் அபிநயா, தற்போது மூக்குத்தி அம்மன் படத்தின் 2 ஆம் பாகத்தில் நடிக்க உள்ளார். முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய நிலையில், தற்போது 2 ஆம் பாகத்தை சுந்தர்.சி இயக்கி வருகிறார். தற்போது முதல் கட்ட படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த வாரம் தொடங்கியது. இந்தப் படத்திலும் நயன்தாரா தான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
tamil news ➔ kollywood newsBy sivan|2025-03-10
தனது நிச்சயதார்த்தத்தின் மூலம் விஷாலுடனான நீண்ட நாள் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை அபிநயா!
நாடோடிகள் படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை தான் அபிநயா. இவர் காது கேட்காத வாய் பேச முடியாமல் இருந்தும் தன் நடிப்பு திறமையால் அனைவரையும் அசத்தி இருப்பார்.
இதனால், நாடோடிகளைத் தொடர்ந்து தமிழில் ஈசன், மார்க் ஆண்டனி போன்ற படங்களிலும் பிற மொழி படங்களிலும் பிஸியாக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு இப்போது தனது நீண்ட நாள் காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் போட்டோ வெளியிட்டு ரசிகர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். கையில் நிச்சயதார்த்த மோதிரம் அணிந்தபடி, தன் காதலருடன் கோயில் மணியை அடிப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். ஆனால், இப்போது வரை அந்த நபர் யார் என்பதை அபிநயா வெளிப்படுத்தாமல் இருக்கிறார்.
சமீபத்தில் அவர் நடிகர் விஷாலுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பலரும் விஷாலும் அபிநயாவும் காதலிக்கின்றனர் என வதந்திகளை பரப்பி வந்தனர், இது மிகவும் வைரலான நிலையில், அபிநயா முதல் முறையாக தன் காதல் பற்றி பொது வெளியில் கருத்து தெரவித்தார்.
சமீபத்தில் இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "நான் இப்போ ரிலேஷன்சிப்ல தான் இருக்கேன். என்னோட சின்ன வயசு பிரண்ட் தான் என்னோட பாய் பிரண்ட். 15 வருஷமா இந்த உறவு தொடருது. அவரு என்னோட பிரண்ட். அதுனால அவர்கிட்ட எந்த விஷயமா இருந்தாலும் என்னால பேச முடியும். எந்த விதமான ஜட்ஜ்மெண்டும் இருக்காது. நாங்க இன்னும் எங்களோட கல்யாணம் பத்தி பிளான் எதுவும் பண்ணல. அதுக்கெல்லாம் டைம் இருக்கு. நான் இன்னும் செய்ய வேண்டிய விஷயம் நிறைய இருக்கு" என்றார்.
அத்தோடு நடிகர் விஷால் எனக்கு அண்ணன் மாதிரி. விஷால் ரொம்ப தங்கமான மனுஷன். அவரு ரொம்ப பாசிட்டிவ்வான ஆளு. நானும் அவரும் சீக்கிரம் பிரண்ட்ஸ் ஆகிட்டோம். அவருக்கு நான் எப்படி நடிக்குறேன். எப்படி உதடுகளை அசைக்குறத வச்சு என்ன சொல்ல வர்றாங்கன்னு புரிஞ்சிக்குறேன்னு பார்க்க ரொம்ப ஆசை. அவரு என்கிட்ட சைகை மொழி கத்து தர சொல்லி கேப்பாரு. நாங்க, ஒன்னா சாப்பிட ஆரம்பிக்குற அளவு நெருக்கமாகிட்டோம்.
அவர் என்னோட க்ளோஸ் பிரண்ட். அவரு என்னோட மெமரில எப்போவும் இருப்பாரு. எங்கள சுத்தி வர்ற வதந்தி எல்லாம் ரொம்ப முட்டாள் தனமானது. விஷால் எனக்கு ப்ரபோஸ் பண்ணாரு. எங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகப்போகுதுன்னு வர்ற செய்திய எல்லாம் நம்பாதிங்க.
அவங்க வயுத்துப் பொழப்புக்காக எதையாவது பேசுவாங்கன்னு நான் அதெல்லாம் கண்டுக்காம போயிடுவேன். என்னமோ சொல்லுங்க. நீங்க சந்தோஷமா இருந்தா ஓகே தான்னு நான் போயிடுவேன்." என வதந்தி பரப்புவோர்களின் முகத்தில் அறைந்தார் போல பேசி உள்ளார்.
நடிகை அபிநயா திருமணம் செய்ய இன்னும் நேரம் இருக்கு. எனக்கு சாதிக்க இன்னும் நிறைய விஷயம் இருக்கு என கூறிவந்த நிலையில், இவர் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் செய்ததற்கு அவரை சுற்றி வரும் வதந்திகளே காரணம் என பலரும் கூறி வருகின்றனர். அதே சமயத்தில், தன் திறமையால், சினிமாவில் நல்ல உயரத்திற்கு வரும் அபிநயா வாழ்க்கையிலும் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.