இந்திய அளவில் பெரும் ரசிகர் பட்டாளத்தை தன்வசம் வைத்துள்ள நடிகர் தான் ராம் சரண். தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான இவர். தெலுங்கு துரையின் டாப் ஹீரோவாக மாஸ் காட்டி வருகிறார்.
எஸ்.எஸ் ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தில் ராம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல ஜூனியர் என்டிஆர் பீம் ரோலில் நடத்திருந்தார். இரண்டு ஹீரோக்களில் யாருக்கு அதிக முக்கியத்துவம் என்ற கேள்விக்கே இடம் கொடுக்காதவாறு இருவரின் கதாபாத்திரங்களும் ரேஸில் மாறி மாறி முந்தி இருந்தது. அதிக வசூலை அள்ளி இந்த படம் ராம் சரணின் புகழை உலகறியச் செய்தது. மேலும், பல சர்வதேச விருதுகளை குவித்து புகழின் உச்சிக்கு சென்றுள்ளார் ராம் சரண்.
சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ராம் சரண்:
இந்நிலையில், 9 வயது சிறுவன் ரவுலா மணி குஷால் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ராம் சரணின் தீவிர ரசிகரான இந்த சிறுவன்,அவரை நேரில் பார்க்க ஆசைப்பட்டுள்ளார். அவரின் விருப்பத்தை மேக்யவிஷ் பவுண்டேசன் அதிகாரிகளிடம் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை பவுண்டேஷன் அதிகாரிகள் ராம் சரணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க, நடிகர் ராம் சரண், சிறுவன் சிகிச்சை பெற்று வரும் ஹைதராபாத் ஸ்பர்ஷ் ஹாஸ்பிஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிறுவனை சந்தித்து அவனுடைய ஆசையை நிறைவேற்றி உள்ளார். மேலும், சிறுவனின் குடும்பத்திற்கும் நம்பிக்கை கூறி, தன்னால் முடிந்த உதவியை செய்வதாகவும், குழந்தைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவியதை அடுத்து, ராம்சரணின் ரசிகர்கள், ரியல் ஹீரோ தான் சார் என புகழ்ந்து வருகின்றனர்.

