மாநகரம் திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கிய கைதி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அந்த வெற்றியின் மூலம் விஜயுடன் மாஸ்டர் படத்தில் இணைந்த அவர், பின்னர் தன்னுடைய ஆதர்ச நாயகன் ஆன கமல்ஹாசனுடன் விக்ரம் திரைப்படத்தில் இணைந்தார். இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வசூலிலும் 1000 கோடிக்கு மேல் கலெக்ஷன் செய்தது. இந்த திரைப்படத்தில் தன்னுடைய எல் சி யூ சினிமா யூனிவர்சையும் லோகேஷ் கனகராஜ் உருவாக்கினார். அதுவும் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய லியோ திரைப்படம் வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றாலும், விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை. அதையெல்லாம் களையும் வகையில் தான் தற்போது அவர் ரஜினிகாந்த் உடன் இணைந்திருக்கும் கூலி படத்தை உருவாக்கி வருகிறார். லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தில் மும்மரமாக பணியாற்றி வருகிறார். ரஜினிகாந்த் உடன் முதல் முறையாக அவர் இணைந்திருக்கும் இந்த திரைப்படத்தில், நாகர்ஜுனா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் கூலி படத்தின் புரொமோஷன் தொடங்கும் வரை அனைத்து சமூக ஊடக தளங்களிலிருந்தும் ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொள்கிறேன் என அவரது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், கூலி படத்தின் அப்டேட் எல்லாம் தரமாக வரப் போகிறது என்றும், அது நிச்சயம் பிளாக் பஸ்டர் படமாக வரும் எனவும் கருத்து தெரிவித்தனர். Hey guys! I'm taking a small break from all the social media platforms until #Coolie's promotions With Love, Lokesh Kanagaraj