
tamil news ➔ kollywood newsBy sivan|2025-04-09
குட் பேட் அக்லி பார்க்க ஆவலாக உள்ளேன்: ஜிவி பிரகாஷ்!
நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படம் இன்னும் இரண்டு நாளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் அஜித்துடன் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன்தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகியது. கடந்த 28ஆம் தேதி படத்தின் டீசர் வெளியானது.
டிரைலரும் சில நாட்களுக்கு முன் வெளியானது. படம் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் படம் குறித்து ஜிவி பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில், குட் பேட் அக்லி படத்தின் இசை வேலைகளை மிகவும் நேசித்து செய்துள்ளேன். படத்தை காண ஆவலோடு இருக்கிறேன். மிகவும் உத்வேகமான நேரங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
