தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படும் ஒருவராக சத்யராஜ் இருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ், விஜய் அரசியல் வருகை குறித்து கூறியதாவது, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வலுவாக இருந்தால், எத்தனை பிரச்னைகள் வந்தாலும் அதை செய்துவிட முடியும். அது நடிகர் விஜய்க்கு இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற உறுதியான எண்ணம் கொண்டிருந்தார். எந்த கஷ்டத்திலும் யாரும் பசியோடு இருக்க கூடாது என்று நினைத்தார். அதனால்தான் சத்துணவு திட்டம் கொண்டு வந்தார். அந்த மனிதாபிமானம் மட்டும் இருந்துவிட்டால் அரசியலில் சரியாக பயணம் செய்ய முடியும். அந்த நினைப்பு இருந்தால், அரசியலில் எத்தனை சிக்கல்கள் வந்தாலும் அது சரியான பாதையில் பயணிக்க வைக்கும் என்று அரசியல்வாதி விஜய் குறித்து சத்யராஜ் கூறியிருக்கிறார்.

