ரித்திகா சிங், சந்தீப் கோயட், மனிஷ் ஜான் ஜோலியா நடிப்பில், ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் இன் கார்.

மூன்று பேர்கொண்ட கும்பல் பாலியல் வன்முறையில் ஈடுபடுவதற்காக ரித்திகா சிங்கை கடத்துகின்றனர். அவர்களிடமிருந்து ரித்திகா தப்பித்தாரா? இல்லையா? என்பது கதை.

நடிப்பு என்று பார்த்தால், மூவருக்கும் ரித்திகாவை துன்புறுத்துவது வேலை. ரித்திகாவுக்கு கெஞ்சுவது வேலை அவ்வளவுதான்.

இப்படத்தில் என்ன பிழை என்று பார்த்தால் படமே பிழை தான். கற்பழிப்பு சம்பவத்தை மையமாக கொண்ட ஒரு கதையில், தீர்வு கண்டிருக்கலாம். இல்லை அந்த பெண் படும் கஷ்டத்தை விளக்கியிருக்கலாம். ஆனால், அதை சொல்ல முயற்சித்து சொல்லாமல் போனது மட்டுமே படத்தின் தோல்விக்கு காரணம்.

படத்தின் ஐந்தாவது நிமிடத்தில் காரில் ஆரம்பித்த கதை, 90 நிமிடங்கள் வரை காரில் மட்டுமே பயணம் செய்தது சோர்வை ஏற்படுத்துகிறது.

ரித்திகா சிங் இப்படத்தில் நடிக்க ஒப்புதல் தெரிவித்ததே பெரும் கேள்வி குறி. கூடுதல் கவனத்துடன் இப்படத்தை ஹர்ஷ் வரதன் இயக்கியிருக்கலாம்.

இன்கார் - லாஜிகல் எரர்