
tamil news ➔ kollywood newsBy sivan|2025-06-11
ஆசை ஆசையாய் கட்டிய சொந்த வீட்டிற்கு கூட போகாத தனுஷ்: காரணம் என்ன தெரியுமா?
தனுஷ் நடிப்பில் உருவான குபேர படம் வருகிற ஜூன் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இதற்கான பிரமோஷன் பயங்கரமாக நடந்து வருகிறது. இதுதவிர இட்லிகடை, பாலிவுட் படம் என தனுஷ் செம பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இப்படி இருக்கும் சூழலில் போயஸ் கார்டன் வீட்டிற்கு தனுஷ் போவதில்லையாம். அவருடைய அப்பாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தனுஷ் சொந்த வீட்டிற்க்கே போகாத நிலைமையில் இருக்கிறார். அதாவது தனுஷ் தனது அக்கா மகன் பவிசை வைத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை எடுத்திருந்தார்.
இந்த படம் கலமையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வி அடைந்தது. அதோடு பவிஷை ட்ரோல் செய்யவும் ஆரம்பித்து விட்டனர். இதுகுறித்து அவரது தாத்தா கஸ்தூரிராஜா மேடையிலேயே தனுஷ் பற்றி பேசி இருந்தார்.
அதாவது பவிஷ் நன்றாக படிக்கக்கூடிய பையன். அவனை சினிமாவுக்கு அழைத்து செல்கிறேன் என்று அவனது மாமா பவிஷின் படிப்பை பாழாக்கி விட்டான் என்று பேசியிருந்தார். பொது வழியிலேயே இப்படி பேசிய நிலையில் வீட்டில் இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்திருக்கிறது.
கஸ்தூரிராஜா மற்றும் தனுஷ் இடையே சண்டை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தனுஷ் அதிக நேரம் படப்பிடிப்பிலேயே செலவிடுகிறாராம். அதோடு பல கோடி செலவு செய்து ஆசை ஆசையாய் கட்டிய போயஸ் கார்டன் வீட்டுக்கே செல்வதில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் தொடர்ந்து தனுஷ் பற்றி நிறைய விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. குபேரா பட விழாவில் தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்திருந்தார். இப்போது அவரது வீட்டிலேயே இவ்வளவு பெரிய பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது.
