
kollywood newsBy sivan|2024-09-09
விஜய்யை மறைமுகமாக தாக்குகிறாரா மாரி செல்வராஜ்?
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று வசூலை அள்ளி வருகிறது.
இத்திரைப்படம் குறித்து பல பேட்டிகளில் பேசி வரும் மாரி செல்வராஜ், வாழை படம் குறித்தும் சினிமா குறித்தும் பல விஷயத்தை பேசி உள்ளார்.
இந்த படம் குறித்து, யூடியூபில் பேசிய மாரி செல்வராஜ், வாழை படத்தில் பழைய பாடலான மஞ்சள் பூசும், தூதுவளை இலை அரைச்சி என்ற பாடல் வைத்தது குறித்து பேசியபோது, அந்த பாடல்களை என்னால் மறக்கவே முடியாது என்றார். மேலும், பாடல் என்றால் ஒரு ஆண், ஒரு பெண் சேர்ந்து ஆடுவது அது காதல் பாடல், இல்லை ஒரு குரூப் ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்ந்து ஆடினால் அது கொண்டாட்டம். ஆனால், 50 ஆண்கள் முன்னிலையில் ஒரு பெண்ணை ஆட வைப்பது என்ன மனநிலை, இது அந்த பெண்ணை ஒரு போதை போல இந்த தமிழ் சினிமா காட்டுவது எவ்வளவு கொடுமை என்று பேசியிருந்தார்.
அவர் பேசியதை, தற்போது, கோட் படத்தில் பல ஆண்களுக்கு, மத்தியில் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடனமாடியிருக்கிறார். இதுவரை எந்த படத்திற்கும் த்ரிஷா ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியது இல்லை. இந்த படத்தில் அவருக்கும், விஜய்க்கும் இருக்கும் நட்பின் காரணமாக ஆடி இருந்தார். இந்த படத்தில திரிஷா நடனம் ஆடியதையும் மாரி செல்வராஜ் பேசியதையும் இணையவாசிகள் ஒன்றாக பதிவிட்டு வருகின்றனர்.
Tags:#Thalapathy vijay
