நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் சார்பில் அனைத்து மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் பகுதி நிர்வாகிகள் பங்கேற்ற சிறப்பு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 2,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன், நற்பணி இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து ரசிகர்களுடன் தனித்தனியாக புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார். இதனால் நிகழ்வில் பங்கேற்ற ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, வாசிப்பு பழக்கத்தையும் அறிவுத் திறனையும் ஊக்குவிக்கும் வகையில் புத்தகக் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் முதல் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு புத்தகக் கண்காட்சியை ஊக்குவித்தார். தொடர்ந்து ஏராளமானோர் தங்களுக்கு பிடித்த புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் என 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்தக் கூட்டம் நிறைவடைந்த பின்னர், நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.