பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித்துடன் இனைந்து நடித்திருப்பார் நயன்தாரா. இது அனைத்து படங்களும் பிளாக் பாஸ்டர் திரைப்படங்கள் தான்.

ஆனால், இனி வரும் காலங்களில் அஜித்துடன் நடிக்க கூடாது என முடிவு செய்துள்ளாராம் நயன்தாரா.

இதற்கு காரணம், சென்ற ஆண்டு மார்ச் மாதம் லைகா நிறுவனம் தயாரிப்பில், அஜித் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், சில நாட்களாக AK 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவாரா என்ற கேள்வி கோலிவுட் வட்டாரமெங்கும் வளம் வந்தது.

இந்நிலையில், விக்னேஷ் சிவன் AK 62 படத்தில் இருந்து வெளியேறியது அனைவரும் அறிந்ததே.

தன் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவில்லை என்பதால் வருத்தத்தில் இருக்கும் நயன்தாரா,  இனி அஜித் குமாருடன் நடிக்க கூடாது என முடிவு செய்துள்ளாராம்.

இதை அறிந்த ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.