காதலிக்க நேரமில்லை திரை விமர்சனம்

ரவி மோகன், நித்யா மேனன், வினய் யோகி பாபு இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம்.

குழந்தையே வேண்டாம் என்று இருப்பவனுக்கும், குழந்தை மட்டுமே வேண்டும் என்று இருப்பவளுக்கும் இடையே நடக்கும் காதல் தான் இந்த காதலிக்க நேரமில்லை.

இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து விட்ட நாகரிகம், அளவுக்கு அதிகமான தொழில்நுட்பம் குழந்தை பெற்றெடுப்பதில் இருக்கும் அதி நவீன தொழில்நுட்பம் என்று இவை எல்லாத்தையும் மையமாக வைத்து ஒரு காதல் கதையை எடுத்திருக்கிறார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி.

படத்தின் முதல் பாதியும் சரி இரண்டாம் பாதியும் சரிசமமான வேகத்திலேயே செல்கிறது என்பது கூடுதல் சிறப்பு.

ஜெயம் ரவி நன்றாக நடிக்கிறாரா நித்யா மேனன் நன்றாக நடிக்கிறாரா என்று ஆளுக்கு ஆள் போட்டி போட்டு நடித்திருப்பதால் இவர்களின் பெர்பார்மன்ஸ் அளவுக்கு அதிகமாக ஸ்கோர் செய்கிறது என்று சொல்லலாம்.

அதைவிட ஒரு படி மேலே போய் நடிகர் லால் நான்கு சீனில் வந்தாலுமே நச்சென்று நடித்துக் கொடுத்திருக்கிறார்.

படத்தின் ஒளிப்பதிவு எந்த அளவுக்கு கூடுதல் பலமோ, அதை விட அளவு கடந்த கூடுதல் பலம் படத்தின் பின்னணி இசையும் பாடல்களும், AR ரகுமான் பின்னிப் பெடல் எடுத்திருக்கிறார்.

படத்தின் குறையாக பார்க்கப்படுவது சமுதாயம் கலாச்சாரம் என்ற ஒரு கட்டமைப்பில் வாழும் மனிதர்கள், சில முற்போக்கு சிந்தனை சில மேல்தட்டு மக்களின் அதிகாரத்தில் நடக்கும் பிரச்சனைகளை சொல்லி இருப்பதனால் அது அவர்களுக்கு ஒரு இணைப்பு ஏற்படுத்தாமல் போக வாய்ப்பு இருக்கிறது.

இயக்குனர் கிருத்திகா உதயநிதியின் முந்தய படங்களை மனதில் வைத்து இந்த படத்தை பார்த்தால் சுமாராகத்தான் தோன்றும். ஆனால் கிருத்திகாவுடைய உதயநிதியா இப்படி ஒரு படம் எடுத்திருக்கிறார் என்று யோசித்துப் பார்த்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.

மற்றபடி காதலிக்க நேரமில்லை இன்றைய இளைய தலைமுறையினருக்கு பிடித்தமானதாக இருக்கும்.