தசரா பட இயக்குனருடன் கைகோர்க்கும் சிரஞ்சீவி

நடிகர் சிரஞ்சீவி தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர்.

இதுவரை, 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த வால்டர் வீரய்யா வசூலில் கலக்கியது. ஆனால், அதற்கடுத்து வெளியான போலோ ஷங்கர் திரைப்படம் தோல்விப்படமானது.

அடுத்ததாக, இவர் நடித்துவரும் விஸ்வாம்பரா திரைப்படம் 2025இல் திரைக்கு வருகிறது. யுவி கிரியேஷன் தயாரித்துள்ள இந்தப் படத்தை வஷிஷ்டா இயக்கியுள்ளார்.

இந்தப் படத்துக்கு அடுத்து தசரா இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடிலா இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. படக்குழு போஸ்டரில் இதை தெரிவித்துள்ளது.

இயக்குநர் இது குறித்து, சத்தியம் ரசிகரின் தாண்டவம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://x.com/odela_srikanth/status/1863955968436093326?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1863955968436093326%7Ctwgr%5E293f8ad879a495c57d8002cbb5f93ba19c543247%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F

இது குறித்து நடிகர் நானியும் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

“அவரால் ஈர்க்கப்பட்டு வளர்ந்தேன், ஒவ்வொரு முறையும் மணிக்கணக்கில் வரிசையில் நின்றேன், நான் என் மிதிவண்டியை இழந்தேன்.

https://x.com/NameisNani/status/1863954922926137824?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1863954922926137824%7Ctwgr%5E293f8ad879a495c57d8002cbb5f93ba19c543247%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F

நான் அவரை கொண்டாடினேன், இப்போது நான் அவரது படத்தை வழங்குகிறேன். இது ஒரு முழு வட்டம்” எனக் கூறியுள்ளார்.

இந்தப் படத்தை அனானிமஸ்புரடக்‌ஷன், எஸ்.எல்.வி இணைந்து தயாரிக்கிறது.