டிசம்பர் 5-ஆம் தேதி, புஷ்பா 2 படம் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பீலிங்ஸ் பாடல், இணையத்தில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், படம் 5-ஆம் தேதி வெளியாக இருந்தாலும், இந்த படத்தின் இறுதி பணிகள் இதுவரை முடிந்தபாடில்லை.
சூழ்நிலை இப்படி இருக்க, ஒரு சில தமிழ் படங்கள் புஷ்பா 2 படத்துக்காக வழி விட்டுள்ளது. டிசம்பர் 6-ஆம் தேதியில் வெளியாக இருந்த பேமிலி படம், பிளட் அண்ட் பிளாக் ஆகிய இரு படங்களும் தள்ளி போயுள்ளது. மேலும் இந்த படத்தை தவிர அந்த நாளில் ராஜா கிளி, ஆலம்பனா போன்ற ஒரு சில படங்கள் வெளியாக இருந்தது.
இருப்பினும், அந்த படங்களின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளார்கள். இருப்பினும் இந்த மாதம், விடுதலை 2, ராஜா கிளி, சூது கவ்வும், ஒன்ஸ் அபொன் எ டைம் இன் மெட்ராஸ் போன்ற படங்கள் வெளியாகவுள்ளது. நிறைய படங்கள் பொங்கலுக்கு தள்ளி போனதுக்கு காரணமே புஷ்பா 2 தான் என்றும் கூறப்படுகிறது.
புஷ்பா 2 படத்திற்காக தமிழ் படங்களை ரிலீஸ் செய்வது தள்ளிப் போவது என்பது, இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது