இத்தனை வருட திருமண வாழ்க்கை எல்லாமே பொய் என்பது போல திடீர் என்று ஒருநாள் இரவு 11 மணிக்கு விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டார் சாய்ரா பானு.
இது சினிமாவட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியது. ஏன் என்றால், சினிமாவை பொறுத்தவரை மிஸ்டர் கிளீனாக வளம் வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான். அப்பேர்பட்டவருக்கே விவகாரத்தா என்று பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில், தற்போது அவரது மகள், இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். மேலும் இவர்களை சேர்த்து வைப்பதற்காகவே switzerland-ல் இருந்து இந்தியாவுக்கு திரும்பியுள்ளார் அவரது மகள். மறுபுறம் சாய்ரா பானு, கோபத்தில் பம்பாய் கிளம்பி சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது.
இப்படி இருக்க, ஒரு சிலர் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி இல்லாததும் பொல்லாததையும் கிளப்பி கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே சித்தார் கலைஞருடன் தொடர்பு படுத்தி பேசிக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். மறுபக்கம், சாய்ரா பானு 1500 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கேட்டுள்ளார் என்ற செய்தியும் பரவி வருகிறது.
ஆனால் இந்த இரண்டிலும் உண்மை தன்மை என்பது துளி கூட இல்லை. இன்னும் சொல்லப்போனால், சாய்ரா பானு கோபத்தில் பம்பாய் சென்றபோது கூட, ஏ.ஆர்.ரஹ்மான் அவர் மகளிடம் கூறியுள்ளார், ‘பேசாமல் பம்பாயில் ஒரு வீடு வாங்கிவிடுவோமா.. அங்கு வேண்டும் என்றால் அவர் இருந்துகொள்ளட்டும், அவர் கோபம் தீரும் வரை..’ என்று கூறியிருக்கிறார். இப்பேற்பட்டவரை தான் ஆபாசமாக தொடர்பு படுத்தி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அது மட்டுமின்றி, இவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சனையே, நேரம் செலவழிக்கவில்லை என்பது தானாம். மற்றபடி, வேறு எந்த தகராறும் இல்லை.. இதை சரி செய்ய, ஏ.ஆர். ரஹ்மான் தற்போது கமிட் ஆகி இருக்கும் ப்ராஜெக்ட்களை முடித்துவிட்டு, ஒரு சின்ன பிரேக் எடுக்க உள்ளாராம். அதில் தனது மனைவியை சமாதானம் செய்யவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. சாய்ரா பானுவும் ஒரு கோபத்தில் எடுத்த முடிவே தவிர, உள்ளுக்குள் அதீதமான அன்பு உள்ளதாம். எது எப்படியோ இருவரும் ஒன்று சேர்ந்தால் மிகவும் மகிழ்ச்சி என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.