தமிழ்த் திரைப்பட பிரபல நடிகர் விஜயகுமாரின் மகன்தான் நடிகர் அருண் விஜய். இவர் 1995ம் ஆண்டு சுந்தர் சி. இயக்கத்தில் வெளியான ‘முறை மாப்பிள்ளை” என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகினார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல வித்தியாசமான கேரக்டரில் நடித்து ரசிகர்களிடம் பாராட்டு பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் இதுவரைக்கும் நடித்திடாத மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ள திரைப்படம் தான் “வணங்கான்”.
2022ம் ஆண்டு வணங்கான் படத்தை இயக்க உள்ளதாக இயக்குநர் பாலா அறிவித்திருந்த நிலையில் முதலில் இப்படத்தில் நடிகராக சூர்யாவின் நடிப்பில் அவரது 2டி எண்டர்டென்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருந்தது. பின் சில காரணங்களால் சூர்யா இந்த திரைப்படத்திலிருந்து விலகினார். தொடர்ந்து இந்த திரைப்படத்தில் அருண் விஜய் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகிய நிலையில் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. நீண்ட நாட்களாக போஸ்ட் ப்ரோடுக்க்ஷன் பணியில் இருந்த இந்த படம் தற்பொழுது முழு பணியும் முடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அருண் விஜய் மற்றும் ரோஷிணி பிரகாஷ் இருவரின் நடிப்பில் உருவாக்கி வந்த திரைப்படம் தற்போது வெளியீட்டிற்குத் தயாராகி உள்ளது.
ஆக்ஷன் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தநிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படத்தின் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
https://x.com/sureshkamatchi/status/1858729244077289664?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1858729244077289664%7Ctwgr%5E7a9e1d50359cf09bdce02a3c5f4e612fb525bd9a%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் உருவாகிவரும் வணங்கான் திரைப்படம் வருகின்ற 2025ம் ஆண்டு தமிழர் திருநாளான பொங்கல் விழாவோடு வெளியாகும் என்று கூறியுள்ளார். இன்று அருண் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இத்திரைப்படத்தின் ரிலீஸ் தினத்தின் தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.