மீண்டும் ஒரு வரலாற்றுப் படம் நடிக்கப் போகும் சூர்யா!

இந்த தடவை பட்ஜெட் கொஞ்சம் ஜாஸ்தி!

தமிழ் திரையுலகில் 25 ஆண்டுகளுக்கு மேல் நடித்து வருபவர் சூர்யா. 2000க்கு பின் சினிமாவில் தொடர் வெற்றிகளை குவித்து வந்த சூர்யாவுக்கு கடந்த 2013-ம் ஆண்டுக்கு பின்னர் அவர் நடித்து தியேட்டரில் ரிலீஸ் ஆன படங்கள் எல்லாமே பெரும் சறுக்கல்களையே சந்தித்து வருகின்றன. இதற்கு இடையே அவர் நடிப்பில் வெளிவந்த சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகி வெற்றிபெற்று ரசிகர்களுக்கு ஆறுதல் தந்தன.


இதனால் மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த சூர்யா, 2 ஆண்டு கடினமான உழைப்பில் வெளியாகியிருக்கும் படம் தான் கங்குவா,. ஆனால் இப்படம் ரிலீஸ் ஆன நாள் முதல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. நடிகர் சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய தோல்விப் படமாக கங்குவா இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கங்குவா படத்தின் தோல்விக்கு பின்னர் நடிகர் சூர்யா நடிப்பில் சூர்யா 44 திரைப்படம் உருவாகி இருக்கிறது.

சூர்யா 44 திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது. இதையடுத்து சூர்யாவின் 45-வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங்கும் இன்னும் ஒரிரு மாதத்தில் தொடங்க உள்ளது. இப்படத்தை போல் நடிகர் சூர்யா மேலும் ஒரு பான் இந்தியா படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அது கங்குவா படத்தை போல் வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக உருவாக உள்ளதாம். அப்படத்தின் பெயர் கர்ணா. அப்படத்தை ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்க உள்ளாராம். இப்படத்தின் பட்ஜெட் மட்டும் சுமார் 600 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தின் மூலம் நடிகர் சூர்யா பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அவர் நடிக்கும் முதல் நேரடி இந்தி படம் இதுவாகும். கங்குவா படம் செம்ம அடி வாங்கிய நிலையில், அதே பாணியில் நடிக்க சூர்யா எடுத்துள்ள இந்த ரிஸ்க் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.