ஆங்கில படங்களில் புகழ்பெற்ற இயக்குனரான ரெட் ப்ளீஸ் காட் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம்.
கிளாடியேட்டர் முதல் பாகம் அனைவரையும் வாயை பிளந்து பார்க்க வைத்த படம். அந்தப் படத்தினால் அந்தப் படத்தின் கதாநாயகன் Russel Crow ஆஸ்கார் விருதும் வாங்கினார்.
அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளிவந்துள்ளது, கதைக்கொரு முதல் பாகத்தில் காப்பாற்றிய Lycius என்ற சிறுவன் இரண்டாவது பாகத்தில் எப்படி வளர்ந்து மீண்டும் ரோமாபுரி நாட்டின் அரசன் ஆகிறார் என்பதே.
படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் நம்மை ஸ்தம்பிக்க வைக்கின்றன. திரைக்கதையின் நேர்த்தி, பின்னால் இருக்கும் ஜூனியர் ஆர்டிஸ்ட்களின் நேர்த்தியான நடிப்பு நம்மை வியக்க வைக்கின்றன.
இந்த படத்தின் மிகப்பெரிய பலம் இசை, ஏனென்றால் இந்த படத்தின் இசை எங்கே இருக்கிறது என்று நம்மால் தனியாக பிரித்துக் கூட பார்க்க முடியாது.
இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கும் டென்சன் வாஷிங்டனுக்கு ஆஸ்கார் விருது கூட பரிந்துரைக்கலாம் அவ்வளவு ஒரு நேர்த்தியான வில்லத்தனமான நடிப்பு.
மொத்தத்தில் கிளாடியேட்டர் 2 படம் ரசிகர்களுக்கு விருந்து திரையரங்குகளில் சென்று அந்தப் படத்தை முழுதாக பார்த்தால் ஒரு வித்தியாசமான அனுபவத்தை உணரலாம்.