நடிகர் விஜய்க்கு துப்பாக்கி, கத்தி, சர்கார் எனத் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
இவர் இயக்கிய தர்பார் சுமாரான வரவேற்பினைப் பெற்றது.
அடுத்து நடிகர் விஜய்யுடன் படம் இயக்குவதாக இருந்தது. பின்னர் அந்தப் பேச்சுவார்த்தை கைவிடவே தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுடன் ‘எஸ்கே 23’ என்ற படத்தினை இயக்கி வருகிறார்.
படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதற்கிடையே, திடீரென நடிகர் சல்மான் கானின் புதிய படத்தை ஏ. ஆர். முருகதாஸ் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது.
சிக்கந்தர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் 2025 ஆம் ஆண்டு ரமலானுக்கு வெளியாகுமென போஸ்டரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், முருகதாஸ் பிறந்த நாளுக்கு எஸ்கே 23 படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் படப்பிடிப்பு விடியோவை வெளியிட்டுள்ளது.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
https://x.com/SriLakshmiMovie/status/1838934725102026923?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1838934725102026923%7Ctwgr%5Ee856ce33a0c4c62495a425f29296feac86ec0830%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F