கடைசி உலகப் போர் திரை விமர்சனம்

ஹிப் ஹாப் ஆதி நடித்து, இயக்கி, இசை அமைத்து, தயாரித்து, வெளியிட்டு இருக்கும் படம்.

‘நட்டி’ நட்ராஜ், நாசர், முனீஸ் காந்த், குமரவேல், அழகம்பெருமாள், சிங்கம் புலி, ஹரிஸ் உத்தம்மன், ஆத்மிகா என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் உள்ளது

இதுவரை தமிழில் பெரிதும் காட்டப்படாத புதுமையான கதைக் களம் .

2028-ல் கதை தொடங்குகிறது, நட்டி தமிழக முதலமைச்சர் மச்சான் மற்றும் பினாமி, இவர் தான் இந்த ஆட்சியையே உருவாக்கினார் என்பது போல் ஒரு கிங் மேக்கர் ஆக இருக்கிறார். உலகமே தற்போது இரண்டாக பிரிந்துள்ளது.

ரிபப்ளிக் நாடுகள், UNO நாடுகள் என இரண்டாக பிரிய, இதில் இந்தியா நடுநிலையாக உள்ளது, இந்த நேரத்தில் முதலமைச்சர் மகள் ஆத்மிகா அறிமுகம் கிடைத்து அவரை காதலிக்க தொடங்குகிறார் ஹிப்ஹாப் ஆதி.

இந்த நிலையில் பல லட்சம் கோடிகள் ஒரு ஹார்பர் கண்டெய்னரில் இருக்க, அதை வெளியே எடுக்க நட்ராஜ் ஒரு கலவரத்தை ஏற்படுத்துகிறார். ஆனால், கலவரம் கண்ட்ரோல் மீறி செல்ல, ராணுவம் களம் இறங்கி தமிழகத்தை கைப்பற்றுகிறது. ஆதியை தீவிரவாதி லிஸ்டில் சேர்க்கின்றனர்.


இந்நிலையில் ரிபப்ளிக் நாடுகள் இந்தியாவை தாக்க ஆரம்பிக்க, மொத்த சென்னையையும் அழிக்கின்றனர், அதன் பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

ஹிப்ஹாப் ஆதி உலகப்போர் அளவுக்கு சிந்தித்து இந்த கதையை உருவாக்கி தான் மட்டுமே இதை சுமக்க வேண்டும் என்று இல்லாமல், படத்தின் செகண்ட் ஹீரோ போல் தான் வருகிறார். முதல் ஹீரோ நட்ராஜ் என்கிற நட்டி தான்.

இவர் தான் கதையையே சொல்லி படத்தை தொடங்குகிறார், ஆரம்பத்தில் உலகம் எப்படி தோன்றியது என இவர் சொல்லும் கதையே நம்மை படத்திற்குள் கொண்டு வருகிறது.

இதில் நாசர், முனிஷ்காந்த், சிங்கம்புலி மற்றும் ஆதி-யின் அனைத்து படங்களில் வரும் அவர்கள் நண்பர்கள் என அனைவருமே நன்றாக நடித்துள்ளனர்.

தமிழ்நாடு ரிபப்ளிக் கண்ட்ரோல் வந்து தனி நாடாகி, அதுவரை ஊர், மொழி, சாதி, இனபெருமை பேசிய மக்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் அவர்கள் படும் கஷ்டத்தை காட்டிய விதம், கண்டிப்பாக இந்த தலைமுறை அடுத்த தலைமுறைகளுக்கு இதை எடுத்து செல்ல கூடாது என்பதை உணர்த்துகிறது.

ஹிப்ஹாப் ஆதி எப்போதுமே இந்த ஜெனரேஷன் ஆட்களை கவரும் படி கதை, வசனம் என எடுப்பவர். அந்த வகையில் ஒரு சென்சிட்டிவ் அண்ட் எதிர்காலத்துலாக ஒரு கதையை கற்பனையாக சொன்ன விதம் சூப்பர், அதை இவ்வளவு கம்மி பட்ஜெட்டில் VFX Work இவ்வளவு பெட்டர் ஆக செய்தது பெரிய விஷயம்.

ஆனால், இத்தனை நல்ல கான்செப்ட் இருந்தும் பெரிதாக படத்தில் அழுத்தமான காட்சிகள் என்று இல்லை.

இத்தகைய கதையில் கண்டிப்பாக ஒரு எமோஷ்னல் போராட்டம் இருக்க வேண்டும், அப்படியான போராட்டம் மிஸ்ஸிங், அதனாலேயே டைம் பாஸாக இதில் கூறிய பல நல்ல கருத்துக்களையும் கடந்து செல்லும் நிலை உள்ளது.

ஒளிப்பதிவு நன்றாக இருந்தாலும், ஒரு சில இடங்களில் பிசிறு தட்டுகிறது. குறிப்பாக சென்னையே அழிந்து ஒரு ஊரையே காட்ட வேண்டும், அதை நன்றாக செய்திருந்தாலும், பல இடங்களில் லைட் வெளிச்சம் நமக்கு கன் கூசுகின்றது.

இந்தப் படத்தில் VFX காட்சிகள் மிகவும் அற்புதமாக உள்ளன. VFX டைரக்டருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.

இசை எப்போதும் போல் ஹிப்ஹாப் கதைக்கு ஏற்றார் போல் இசையமைத்துள்ளார். ஆனால் ஆங்காங்கே ஏழுமலை படத்தில் வரும் இசையையும் பயன்படுத்தியுள்ளார். அதை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம்.

ஆக மொத்தத்தில் கடைசி உலகப் போர். தமிழ் சினிமாவின் புதிய முயற்சி. அதற்காகவாவது ஒரு தடவை பார்க்கலாம்.