தனுஷ் உடன் முதல் முறையாக கைகோர்க்கும் சத்யராஜ்

பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து புதுமுகங்களை வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து இளையராஜா பயோபிக் மற்றும் இந்தி படம் என பல படங்களைக் கைவசம் வைத்துள்ள தனுஷ் மீண்டும் ஒரு படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்து வருகிறது.

தற்காலிகமாக ‘DD4’ என அழைக்கப்படும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் ராஜ்கிரண் நடிப்பது ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது சத்யராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தில் அருண் விஜய் மற்றும் அசோக் செல்வன் ஆகியோரும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.