ஏ ஆர் முருகதாஸ் படத்தில் நடிக்க போகும் காஜல் அகர்வால்

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான பொம்மலாட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை காஜல், முன்னணி நடிகர்களுடன் எக்கசக்கமான படங்களில் நடித்துவிட்டார்.

கமல், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி, விஷால், ஜெயம் ரவி ஆகியோருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்தியன் 2 படத்தின் இறுதியில் வரும் ட்ரெய்லரில் கொஞ்சம் நேரம் வந்து போகும் காஜல், இந்தியன் 3 படத்தில் தாக்‌ஷாயினி எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு அந்த அளவு நடிக்கவில்லை என்றாலும் ஒரு சில படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

இந்நிலையில், ஏ.ஆர். முருகதாஸ் – சல்மான் கான் காம்போவில் உருவாகும் சிக்கந்தர் படத்தில் காஜல் நடிக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது. இதற்கு முன்பாக மெகா ஹிட்டான ஏ.ஆர். முருகதாஸின் துப்பாக்கி படத்தில் காஜல் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.