கோட் படத்தின் 4வது பாடல் குறித்து தற்போது அபிஸியல் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி கோட் 4வது சிங்கிள் வரும் 31ம் தேதி வெளியாகிறது. யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இந்தப் பாடல் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 4வது சிங்கிள் அப்டேட்டாக வெளியாகியுள்ள போஸ்டரில், போக்கிரி பட ஸ்டைலில் போஸ் கொடுத்துள்ளார் விஜய். மேலும், “இளைய தளபதியோட பார்ட்டி பண்ண ரெடியா..” என்ற கேப்ஷனும் ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளது. இதனால் கோட் 4வது பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் பாடலில் விஜய்யுடன் த்ரிஷா டான்ஸ் ஆடியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதுகுறித்து வெங்கட் பிரபு தரப்பில் இருந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.
இந்நிலையில், கோட் ட்ரெய்லரில் படத்தின் கதை குறித்து எல்லா லீடும் இருக்கிறது. ஆனால், ரசிகர்கள் யாரும் அதனை சரியாக டீ-கோடிங் செய்யவில்லை என வெங்கட் பிரபு ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், கோட் படத்தின் திரைக்கதை வேகமாக இருக்கும் எனவும், அடுத்து என்ன சீன் வரும் என்பதை யாராலும் கணிக்கவே முடியாது என்றும் அடித்துக் கூறியுள்ளார். விஜய் கேரியரில் கோட் கண்டிப்பாக ப்ளாக் பஸ்டர் மூவியாக இருக்கும் என வெங்கட் பிரபுவே நம்பிக்கையுடன் பேசியதும், இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.