சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாகி வரும் ‘சூர்யா 44’ எனத் தற்காலிகமாக அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா மற்றும் படத்தொகுப்பாளராக ஷஃபீக் முகமது அலியும், ஸ்டண்ட் இயக்குனராக கெச்சா காம்பக்தேயும், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணனும் பணியாற்றுகின்றனர்.
படத்தில் சூர்யாவோடு பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், டாணாக்காரன் தமிழ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வில்லனாக உறியடி விஜயகுமார் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இன்னும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படாத நிலையில் சமீபத்தில் ஒரு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி கவனம் பெற்றது.
இந்த படத்தின் ஷூட்டிங் முதல் கட்டமாக அந்தமான் தீவுகளில் நடந்தது. அதன் பின்னர் ஷூட்டிங் சில வாரங்கள் ஊட்டியில் நடந்தது. இதையடுத்து அடுத்த கட்ட ஷூட்டிங் கேரளாவில் நடக்க இருந்த நிலையில் சூர்யாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தற்போது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாம்.