மலையாள நடிகர் முகேஷ் பற்றி நடிகை சரிதா கூறும் பகிர் தகவல்

மலையாள நடிகர் முகேசும் நடிகை சரிதாவும் கடந்த 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2011 ஆம் ஆண்டு விவகாரத்து பெற்றனர்.

இப்போது, கொல்லம் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏவாக நடிகர் முகேஷ் உள்ள நிலையில், அவரை பற்றி நடிகை சரிதா பல அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார்.

இதுகுறித்து கேரள ஊடகத்திடம் நடிகை சரிதா கூறுகையில், நான் இந்த தகவல்களை வெளியே சொல்வதற்காக வெட்கப்படுகிறேன்.

முகேசுக்கு பலருடன் தொடர்பு இருந்தது. பல சினிமாக்களில் நடித்துள்ளேன். சினிமாவில் பெண்களை கொடுமைப்படுத்தும் காட்சிகளை பார்த்துள்ளேன்.

ஆனால், உண்மையிலேயே எனக்கும் அப்படி நடக்குமென்று நான் கனவிலும் நினைக்கவில்லை. எனக்கு நடந்த கொடுமைகள் குறித்து மீடியாக்களிடம் இதுநாள் வரை கூறியதில்லை.

நான் கர்ப்பிணியாக இருந்த போது, ஓணம் பண்டிகை வந்தது. இந்த தருணத்தில் அனைவருமே மகிழ்ச்சியாக இருக்கதானே நினைப்போம். ஆனால், இந்த சமயத்தில் கூட முகேஷ் சண்டை போட்டு என்னை வயிற்றில் எட்டி உதைத்தார். நான் கீழே விழுந்து கதறி அழுதேன். அப்போது, நீதான் நல்ல நடிகைதானே சிறப்பாக நடிக்கிறாய் என்று கூறி சிரித்தார்.

அவர் எப்போது எப்படி நடப்பார் என்பதை கணிக்கவே முடியாது. 9 மாத கர்ப்பிணியாக நான் இருந்த போது, ஹோட்டலுக்கு டின்னருக்கு சென்றோம். வெளியே வந்த போது, என்னை காரில் ஏறவிடவில்லை.

காரை முன்னும் பின்னும் இயக்கினார். நான் காருக்காக அங்குமிங்கும் ஓடுகிறேன். கடைசியில் கீழேவும் விழுந்து விட்டேன். அந்த இடத்திலேயே கதறி அழ தொடங்கினேன்.

மற்றொரு இரவில் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது, ஏன் லேட்டாக வந்தீர்கள் என்று கேட்டதற்காக என் தலையை பிடித்து தரையில் அடித்தார். அதன் பிறகு, முகேஷின் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன்.

ஒரு முறை என்னை சந்திக்க முகேஷின் தந்தை வந்தார். அவர் என்னிடத்தில் தன் மகனின் நடவடிக்கைகள் சரியில்லை என்று என் கையை பிடித்துக் கொண்டு சொன்னார். ஆனால், என்ன நடந்தாலும் தயவு செய்து வெளியே சொல்லி விடாதே என்று என்னிடத்தில் கெஞ்சி கேட்டுக் கொண்டார்.

அவருக்கு சத்யம் செய்து கொடுத்ததால், நான் மாமா உயிருடன் இருந்த வரை நான் அனுபவித்த கொடுமைகளை வெளியே சொல்லவில்லை. ஆனால், இப்போது, அந்த சத்தியத்தை உடைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.